Saturday, 24 December 2011

அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை:

அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எனக் கேட்டார். உடனடியாக விடையளித்தார் அறிஞர் அண்ணா. வியப்பாக இருக்கிறதா? ஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார் அவர். நூற்றை ஆங்கிலத்தில் சொன்னால் அதில் ’D’ என்னும் எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக் கூறி நிறைவு செய்தார்.

ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா!


ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம் 'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள். உடனடியாக அண்ணா சொன்னார் - “No sentence ends with because because ‘Because’ is a conjunction.”


அறிஞர் அண்ணாவைப் பார்க்க இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் வந்திருந்தார். அச்செய்தியாளர் 'அறிஞர் அண்ணா ஆங்கிலத்திலும் உலகச் செய்திகளிலும் வல்லவர் இல்லை; பன்னாட்டு அவை(‘UNO’) பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது' என்னும் எண்ணம் கொண்டிருந்தார். அண்ணாவை எப்படியாவது கேள்வியில் மடக்கி விட வேண்டும் என எண்ணிப் "பன்னாட்டு அவையைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். அவ்வினாவிற்கு அண்ணா அளித்த விடையில் அச்செய்தியாளர் கொண்டிருந்த இறுமாப்பு அடியோடு தகர்ந்தது. என்ன சொன்னார் அண்ணா என்கிறீர்களா?


"ஐ நோ யுனோ. ஐ நோ யு நோ யுனோ. பட் யு டோன்ட் நோ ஐ நோ யுனோ."
(“I know UNO. I know – you know UNO. But you don’t know I know UNO” )

இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ் தேசியவாதி , தமிழ் அறிஞர். ஆகவே தாய்மொழி தமிழைத் தவிர்த்து/சிதைத்து ஆங்கிலப் புலமையுள்ளவராக வர முடியும் என்பது ஒரு கனவே என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
நன்றி: தமிழ் - Tamil

12 comments:

  1. அண்ணாதுரையின் ஆங்கில புலமைக்கு இன்னுமோர் உதாரணம்,இவர் ராஜ்யசபா mp ஆக இருக்கும்போது பிரதமர் நேருவை பார்த்து கேட்டாராம்,when there is already a minister for home why do we need a minister for housing.இது எப்படி இருக்கு.

    ReplyDelete
  2. என் பள்ளிப்படிப்பின் போது
    ஆசிரியர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன் நண்பரே.
    அதை மீள்வித்த்மைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  3. தங்கள் வருகைக்கு நன்றி. புதியதோர் செய்திக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி @ vizzy

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே @ மகேந்திரன்

    ReplyDelete
  5. அருமை! வாழ்த்துக்கள்!
    பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
    பகிர்விற்கு நன்றி!
    படிக்க! சிந்திக்க! :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  6. மேன்மக்கள் மேன்மக்களே....! இத் தாய் திருநாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டிய அந்த ஒப்பற்ற தலைவனை 'அண்ணா'ந்து பார்க்கிறேன். விண்ணுயர நிற்கின்றார் அண்ணா...!
    நல்லதொரு பகிர்வு!. வாழ்த்துகள் தோழா....!

    ReplyDelete
  7. அறியாத பல தகவல்கள்! வாழ்த்துக்கள்!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
    சிந்திக்க :
    "உங்களின் மந்திரச் சொல் என்ன?"

    ReplyDelete
  8. தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. உங்களின் மந்திரச் சொல் பதிவு அருமை. வாழ்த்துக்கள்! @ திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  9. தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி @ -தோழன் மபா, தமிழன் வீதி

    ReplyDelete
  10. இங்கு வந்து பின்னூட்டம் அளித்து வாழ்த்திய அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. இதுபோன்ற உங்களின் கருத்துக்கள் மென்மேலும் பதிவுகளையிட தூண்டுகோலாக அமைந்து என்னை உற்சாகமூட்டுவதாக உள்ளன.

    நன்றி.

    நட்புடன்
    நடராஜன் வி.

    ReplyDelete
  11. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...
    www.rishvan.com

    ReplyDelete
  12. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி @ Rishvan. உங்கள் வலைப்பக்கம் அருமை; மேலும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!