தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Wednesday, 24 January 2024

*15 பழக்கங்கள் உங்களுக்கே உங்கள் மீது மரியாதையை ஏற்படுத்தும்*

 

நாம் அனைவருமே பல இடங்களில் பிறருடைய மரியாதை நமக்கு கிடைக்க வேண்டும் என்று தான் எதிர்பார்க்கிறோமே தவிர, நாம் நம் மீது எத்தகைய மரியாதை வைத்துள்ளோம் என்பது பற்றி கவலைப்படுவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் வெளியில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் மரியாதையை விட, உங்கள் மீது உங்களுக்கே ஏற்படும் மரியாதையால் கிடைக்கும் உணர்வு உண்மையிலேயே சிறப்பானது. அத்தகைய உணர்வை ஏற்படுத்தும் 15 பழக்கங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.  

1. வாழ்க்கையில் எதுவும் விரைவாகக் கிடைக்க வேண்டும் என அவசரப்படாதீர்கள். நிறுத்தி, நிதானமாக, தெளிவாகச் செய்யும் செயல்களே உங்களுக்கானதை பெற்றுத் தரும்.


2. அனைவருக்கும் எல்லா நேரங்களிலும் Available-ஆக இருக்காதீர்கள். மற்றவர்களுக்கு நேரம் ஒதுக்குவது நல்லதுதான், இருப்பினும் ஏன் அனைவருக்காகவும் நீங்கள் மட்டும் இந்த நேரத்தை வீணடிக்க வேண்டும் என ஒரு முறை சிந்தியுங்கள். 


3. உங்களது தைரியத்தை பயன்படுத்துங்கள். நீங்கள் இறுதியாக எந்த இடத்தில் தைரியமாக செயல்பட்டீர்கள் என்பதை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். எங்கும் தைரியமாக செயல்படவில்லை என்றால், தைரியமாக ஏதாவது செய்யுங்கள். 


4. பிறரை நல்லபடியாக உணர்வைக்கும் நபராக இருங்கள். அதற்காக பிறரிடம் கெஞ்ச வேண்டும் என அர்த்தம் இல்லை. நீங்கள் உங்களுக்கு பிடித்தபடி எதார்த்தமாக இருந்தாலே அனைவரும் நன்றாக உணர்வார்கள். 


5. உங்களுக்கு அதிகம் பயம் ஏற்படுத்துவதை செய்ய முயலுங்கள். இந்த தைரியமான முடிவு உங்கள் மீது உங்களுக்கு மரியாதையைக் கொண்டு வரும். 


6. உங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சில விஷயங்களை செய்யுங்கள். உதாரணத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்றவை தன்னம்பிக்கையை அதிகரிக்கும். 


7. வாழ்க்கையில் தனியாக இருக்க நேர்ந்தால், அதை நினைத்து வருந்தாதீர்கள். தனிமையை உங்களுக்கு எப்படி சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது பற்றி சிந்தியுங்கள். 


8. எல்லா இடங்களிலும் குறைவாகவே பேசுங்கள். குறைவாக பேசுவது பல இடங்களில் உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும். குறைவாகப் பேசும் பழக்கம் பிறருக்கு உங்கள் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும். 


9. பிறருடைய அனுமதிக்காக எப்போதும் காத்திருக்காதீர்கள். உங்களுக்கு தோன்றுவதை தைரியமாக செய்யுங்கள். 


10. தவறான விஷயங்களுக்கு மிக மோசமாக React செய்யாதீர்கள். எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியாக இருப்பது உங்களின் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும். 


11. பிறரை கட்டுப்படுத்துவதை நிறுத்துங்கள். உங்களால் எந்த நபரையும், எந்த சூழ்நிலையும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. எனவே அதன் போக்கில் அவற்றை விட்டுவிட்டு உங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்துங்கள். 


12. நன்கு கவனிப்பவராக இருங்கள். அனைத்தையும் கவனிப்பவர்களால் மட்டுமே, சிறப்பான விஷயங்களை செய்ய முடியும். 


13. நீங்களும் தவறு செய்கிறீர்கள் என்பதை கொஞ்சம் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துங்கள். எல்லா நேரங்களிலும் உங்களை சரியானவராக காட்டிக்கொள்ள முயற்சிப்பது, நிச்சயம் உங்கள் மீது உங்களுக்கு மரியாதையை ஏற்படுத்தாது.


14. வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டு வாழுங்கள். ஏன் வாழ்கிறோம் என்பதே தெரியாமல் ஏதோ ஒரு போக்கில் இருந்து கொண்டிருந்தால், வாழ்க்கை என்னவென்பதே உங்களுக்கு புரியாது. 


15. நீங்கள் சொல்வதை செய்து காட்டுங்கள். நீங்கள் எடுக்கும் தீர்மானங்களை சொன்னபடியே முடித்துக் காட்டும்போது, சுயமரியாதை மேலோங்கிச் செல்கிறது. 


இந்த 15 விஷயங்களை நீங்கள் பின்பற்றுவது மூலமாக உங்கள் சுயமரியாதையை நீங்களே உணர்ந்து, உங்களை நீங்களே சிறப்பாக உணர முடியும். இது வாழ்க்கையில் பல விஷயங்களை தைரியமாக கடந்து செல்ல உங்களுக்கு உதவும்.


Courtesy: Kalkionline.com

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...