தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Showing posts with label ஹைக்கூ கவிதை. Show all posts
Showing posts with label ஹைக்கூ கவிதை. Show all posts

Saturday, 15 October 2011

ஹைக்கூ கவிதைகள்...

தெருவிளக்கு:
மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில் முகம் பார்த்தது
தெருவிளக்கு..

அளவீடு:
நீந்தி நீந்தி சோர்ந்து விட்டது
தொட்டியை அளவெடுக்கிறது
மீன்தொட்டியில் தங்கமீன்!

தேசிய கீதம்:
அரசியல்வாதிகளை
நாற்காலியை விட்டு
எழச் செய்து விடுகிறது
தேசிய கீதம்!

மாற்றம்:
வசந்தம்
வேலையின்றிக் கிடக்கிறது
பனைவிசிறி...

உழைப்பு:
விடிய விடிய உழைத்தும்
வியர்வை இல்லை
கடிகார முட்கள்.

நட்சத்திரம்:
யார்சூட மலர்ந்திருக்கின்றன
விண்வெளித் தோட்டத்தில்
நட்சத்திரப் பூக்கள்...

ஏக்கம்:
பால் குடித்த பிள்ளையாரை
ஏக்கமாய் பார்க்கும்
பசித்த சிறுமி.

பனித்துளி:
பச்சை நாற்றுகளின்
பனித்துளி கண்ணாடிகளில்
வியர்வைபிம்பங்கள்...

மணிக்கூண்டு
கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.

Sunday, 11 September 2011

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்
மேகம்.
உருகாமலும் கரையாமலும்மிதக்குதே வெயிலில் !”மேகம்”
தென்றல் காற்றுக்கு மாத்திரம்கரைந்து உருகும் பஞ்சுப் பொதிமேகம்!
மழை.
யாரைக் தாக்கசரம் சரமாய் அம்புகள் ?"மழை"
பனிக்கட்டி.
(ஐஸ் கட்டி)என்ன ஆச்சரியம்!கெட்டிப்பட்ட படிகத்தண்ணித் துண்டுநீரிலேயே மிதக்குதேபனிக்கட்டி!
நெருப்பு.
நேரில் மோதினால்நீரிலே அழியும்"நெருப்பு"

ஹைக்கூ கவிதைகள்...

வரதட்சணை:
அம்மி மிதித்தவளை
திரும்பி மிதித்தார்கள்
கிரைண்டர் வராததால்
தொ(ல்)லைக்காட்சி பெட்டி!:
தொலைக்காட்சி பார்க்கும் நேரம்
விருந்தினர் வருகை - விசாரிக்க
வராமலா போகும் விளம்பரம்
சுமை:
அறிவின் துளிர்
சுமக்க முடியவில்லை
புத்தகச் சுமை
வாழ்க்கைப் பாடம்:
கிளறினால்
கிடைக்கும் வாழ்க்கை
கற்றுக்கொடுக்கும் கோழி
மதக்கலவரம்:
கருவறையில் பத்திரமாய்
கடவுள்கள் கல்லறையாய்
தெருவெங்கும் அப்பாவிகள்!!
நேரம்:
நேற்று அழிந்த எழுத்து
நாளை கிடைக்காத இனிப்பு
இன்றே சுவைக்கும் கனி

எடைக்குறைவு:
ரேசன் கடைக்காரருக்கு
குழந்தை பிறந்தது
எடை குறைவாய்!
புகை அது பகை:
அலறியது காற்று
ஒளிய இடமில்லை
வாகனப்புகை

ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு

 பூக்கள்.
அரளிச் செடியிலும்.


இருண்ட பௌர்ணமி.
அட...
சந்திர கிரகணம்.


வறுத்த மீன்.
மடித்த காகிதத்தில்
"உயிர்களைக் கொல்லாதீர்" வாசகம்.


சுமக்க விரும்பியதென்னவோ
புத்தகப் பையை.
தீப்பெட்டிச் சிறுமி.


ரேசன் கடையில்
அரிசி கிடைத்தது.
எறும்புகளுக்கு மட்டும்.


உலகெங்கும்
ஒரே மொழியில் பேசும்
மழை.


பால் குடித்த பிள்ளையாரை
ஏக்கமாய் பார்க்கும்
பசித்த சிறுமி.


சாத்தான் வேதம் ஓதியது.
சிகரெட் பெட்டியில்
எச்சரிக்கை.


கொட்டும் மழை.
எரியும் மனது
விற்றுவிட்ட நிலம்.


வானத்துக்குள் பிரவேசித்த
இன்ப வெள்ளத்தில்...
ஊஞ்சல் சிறுமி



பூங்காவில் ஒரு
நேர்காணல்...
மலர்களோடு!


தரையைத் தொடும்வரை
ஊஞ்சலாக்கி மகிழ்விக்கிறதே
ஆலம் விழுதுகள்!

ஹைக்கூ கவிதைகள்

மேகம்.
உருகாமலும் கரையாமலும்
மிதக்குதே வெயிலில் !
”மேகம்”

தென்றல் காற்றுக்கு மாத்திரம்
கரைந்து உருகும் பஞ்சுப் பொதி
மேகம்!

மழை.
யாரைக் தாக்க
சரம் சரமாய் அம்புகள் ?
"மழை"

பனிக்கட்டி. (ஐஸ் கட்டி)
என்ன ஆச்சரியம்!
கெட்டிப்பட்ட படிகத்
தண்ணித் துண்டு
நீரிலேயே மிதக்குதே
பனிக்கட்டி!

நெருப்பு.
நேரில் மோதினால்
நீரிலே அழியும்
"நெருப்பு"

வானவில்.
இயற்கை எங்கோ
ஓவியம் தீட்டத் தொட்டுக் கொள்ளும்
வண்ணக் கலவைப் பேழை
"வானவில்"

மின்னல்.
வானம் சொன்னது:
மழை என்ன அழுகையா?
ஸ்மைல் ப்ளீஸ்...சீஸ்...

இடி.
அடை மழையிலும்
விடாது வெடிக்கும் பட்டாசு
"இடி"

பூ.
மொட்டாகி, மலராகி அடச்சே ...
வாடி உதிர்ந்துபோகும் வாழ்க்கைதானா?
"பூ"

உலகம்.
உருண்டு கொண்டே இருக்கிறது
விடியலைத் தேடி
உலகம்!

உருண்டு கொண்டே இருக்கிறது
வெயிலை, வெப்பத்தை, வெளிச்சத்தைத் தேடி
"உலகம்"

மனிதா.
உன்னை வலைக்குள்
சிறை செய்யப் போதும்
ஒரு கொசு!

காற்று.
குழல் இசையைக் கடத்திவிட்டு
அடுத்தொரு மூச்சாய்
காற்று!

சாலை.
உன்னையும் என்னையும்
இணைக்கும் கம்பியாய் தரையில்
சாலை!

வாயிற் பாய்: (Door mat)
எவ்வளவுதான் அழகாக இருந்தாலும்
வரவேற்பில் மிதிவாங்குவது என்னவோ
வாயிற் பாய்தான்!

சேமிப்பு:
எறும்பும், தேனியும் மாத்திரமே சேமிக்கின்றன.
வாழ்வில் நம்பிக்கை அதிகமோ
விலங்குகளுக்கு?

ஹைக்கூக்கள்

                             நட்சத்திரம்

                             யார்சூட மலர்ந்திருக்கின்றன
                            விண்வெளித் தோட்டத்தில்
                             நட்சத்திரப் பூக்கள்

படைப்பு!

மேகக் கவிஞன்
மழையெனும் மையால்
எழுதிய கவிதைக்கு
இயற்கை இட்ட பெயர்....
பசுமை!'

அடடே!

தொகுதி
மறு சீரமைப்பு...
மருமகளுக்கு
மணி மகுடம்!
மாமியாருக்கு
முதியோர் இல்லம்.

இந்தியாவின் ஏழ்மை

சிக்னல்களில் நிற்கும்
வெளிநாட்டுக் கார்களின்
கண்ணாடிக் கதவு தட்டி
இந்திய ஏழைகள் விற்கிறார்கள்
காகித தேசியக் கொடி

நிலநடுக்கம்

விண்ணை நோக்கி
விதவிதமான
அடுக்குமாடி வீடுகள்!
சுமை தாங்காமல்
சுளுக்கு விழுந்தது
பூமிக்கு!

பட்டுப்புழு

பட்டுப்புடவையில்
வண்ணத்துப்பூச்சி
ஓவியமாக அழுதபடி...

அழையா விருந்தாளி

கையசைத்து
கூப்பிட
மரங்கள் இல்லாததால்
வராமல் போனது
மழை!

சூரியன்

அழகாய் பிறக்கிறான் அமைதியாக மடிகிறான்
நடுவில் அப்படியொரு ஆர்ப்பாட்டமா?
சூரியன்.

கலங்கரை விளக்கு

விடிய விடிய விழித்திருந்து
நிலவுலகிற்கு வழிகாட்டும் மௌனம்
கலங்கரை விளக்கம்

தென்றல்

உருவம் இல்லை
உணர்வு உண்டு
தென்றல்

அக அழகு

தோற்றத்தை விட
குரல் அழகு
குயில்

 நன்றி கடன்

அடுத்த பிறவியில்  
எனக்கு மகளாக 
என் தாய்...

வானவில்

                               பறவைகளைத்
                               தீண்டுவதில்லை
                               வான"வில்"
                               ஆயுதம்...

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...