தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Sunday, 11 September 2011

கவிதையென.....

திருப்தி!
நூறு பட்டுச்சேலை
தொட்டுப் பார்த்துவிட்ட
திருப்தியுடன்
நூல் சேலை
வாங்கிச் செல்கிறாள்
ஏழைப்பெண்!

உரிமை!!
மலரிடம் சொன்னது முள்
பலருக்கு விருப்பம் உண்டு
உன்னை அடைய…
எனக்கு மட்டுமே
உரிமை உண்டு
உன்னை காக்க…!

எதிர்காலம்!!!
கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிளையிடத் துவங்கிவிட்டேன்...

கவிதை_வருத்தம் வேண்டாம் வெற்றியருகே!!!

பூக்கள் உதிர்ந்து விழும்
என்பதற்காக மரங்கள்
வருத்தப்படுவதில்லை.


தென்றல் நின்று போகும்
என்பதற்காக மலர்கள்
வருத்தப்படுவதில்லை.


நிலவு தேய்ந்து விடும்
என்பதற்காக வானம்
வருத்தப்படுவதில்லை.


பிறகு ஏன் மனிதா!
நீ மட்டும் தோல்வி கண்டு
துவண்டு போகிறாய்?

காலம் இருக்கு கனிவது நிச்சயம்
நேரம் இருக்கு நடப்பது நிச்சயம்
உழைப்பு இருக்கையில் வெற்றி நிச்சயம்!!!

தமிழ்க் கவிதைகள்

1 . பிரதிபலன்
குழந்தையை காப்பகத்தில் விட்டனர்
பெற்றோர்; பிரதிபலனாய் முதுமையில்
முதியோர் இல்லம் பெற்றனர்.
2 . தேடல்
மரங்களை மளமளவென வெட்டினான்
மரம்வெட்டி; பின்னர் தனக்கு சோறுபோடும்
கோடரிக்கே பிடியில்லாமல் தேடினான்.

3 .  அணிவகுப்பு
மாலைநேர அணிவகுப்பு
மின் கம்பத்தில் வடத்தினிலே
வரிசையாய் காகங்கள்...

4 . நாகரீக கொள்ளை
படிக்காதவன் பணக்காரன் ஆனான்
பள்ளிக்கூடம் நடத்தி!
5 . மரத்தின் கொடை
நமக்கு நிழல் தருவதற்காய்
தான் வெயிலை சுமந்து
கொண்டிருக்கின்றன - மரங்கள்

'' அம்மா என்றால் அன்பு ''


மாதங்கள் பத்து சுமந்து
உன் கற்பனைகளால்
என்னை செதுக்கிய சிற்பியானாய்...

கருவில் என் பசி தீர்க்க

திகட்டும் பொழுதும்
உணவை உண்டு
என் உயிர் காத்தாய்...

பிறந்தவுடன்

மொழியில்லா என் ஆசைகளை
சிறு அசைவுதனில் புரிந்துகொண்டு
நிறைவேற்றி வைத்தாய்...

விரைவில் நான்

நடை பழக
உன் ஐவிரல் கொண்டு
என் ஒரு விரல் கோர்த்து
பல மைல்கள்
நீயும் நடந்திருப்பாய்...


தலை முடியில்
விரல் வருடி
வலக்கை நீட்டி
என் தலையணை ஆக்கி
வலிகள் தாங்கி
நான் தூங்க விழித்திருப்பாய்...

எனக்கு பசிக்கும் முன்னே

நீ அறிவதால்
பசியை நானோ அறிந்ததில்லை...

குளநீரை கல்லெறிந்து

கலைப்பது போல்
என் தோல்விகளில்
உன் குரல் எறிந்து
என் சோகங்கள்
கலைத்து நிற்ப்பாய்...

எடைதட்டில் உனை அமர்த்தி

உனக்கு சமம் பார்க்க
இவ்வுலகில் ஏதுமில்லை...

இங்கு

உன்னைப்போல்
எந்த தெய்வமும் இல்லை....

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...