தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்
திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...
Showing posts with label தமிழ்க் கவிதை. Show all posts
Showing posts with label தமிழ்க் கவிதை. Show all posts
Sunday, 11 September 2011
தமிழ்க் கவிதை
பொருட் சுவை
உன்னவை என்னவை இல்லை என்றேன்
நிம்மதி வந்தது
என்னவை உன்னவை இல்லை என்றேன்
பகை வந்தது
என்னவை என்னதே என்றேன்
தனிமை வந்தது
என்னவை உன்னவை என்றேன்
பாசம் வந்தது
எல்லாம் உம்மவை என்றேன்
பரிசு வந்தது
உன்னவை உன்னவையே என்றேன்
மதிப்பு வந்தது
நம்மவை நம்மவையே என்றேன்
ஒற்றுமை வந்தது
எல்லாம் பொதுமை என்றேன்
பெருமை வந்தது
உன்னவை என்னவை என்றேன்
உரசல் வந்தது
எல்லாம் நம்மவையே என்றேன்
போர் வந்தது
எல்லாம் எனக்கே என்றேன்
துன்பம் வந்தது
எல்லாம் ஏதுக்கு என்றேன்
இன்பம் வந்தது
எல்லாம் இனிமையே என்றேன்
இனிமையே வந்தது
மனது இதுவும் நிரந்தரமல்ல என்றது
ஒழுக்கம் வந்தது
உள்ளத்து உள்ளே உற்றுப் பார்த்தேன்
தியானம் வந்தது
உடலும் உனதல்ல உலகும் உனதல்ல
ஒளி வந்தது
எதுவுமே உனதல்ல யாதுமே நமதல்ல
மோனம் வந்தது
இருத்தலும் வேண்டாம் இரத்தலும் வேண்டாம்
ஞானம் வந்தது
இறத்தல் மட்டும் வந்தால் போதும்
பேரின்பம் என்றது.
Labels:
தமிழ்க் கவிதை
Subscribe to:
Posts (Atom)






