"ஒளிகாட்டும் வழி"
அன்பின் மொழியினாய் அறம்செய முயலுவோம்;
ஆசைகள் நீங்கிட ஆலயம் தொழுகுவோம்;
இயல்பின் ஒளிஎழ இன்னலை அகற்றுவோம்;
ஈகை பண்பினால் இனிப்பினை பகிருவோம்;
உழைப்பின் உன்னத மகத்துவம் உணருவோம்;
ஊரே மகிழ்ந்திட உறவினை பரப்புவோம்;
எளியோர் மகிழ்ந்திட இயன்றதை உதவுவோம்;
ஏழ்மை குறைந்திட ஏற்றத்தை காணுவோம்;
ஐயம் அகன்றிட வையகம் போற்றுவோம்;
ஒளியின் வழியிலே இருளினை விலக்குவோம்;
ஓய்வை போற்றிட ஒலியினை சுருக்குவோம்;
ஔவியம் அகன்றிட அகல்ஒளி ஏற்றுவோம்;
அஃதே வழியினாய் நன்மையை பெருக்குவோம்;
சிவகாசி சிறுவர்க்கும் சிரிப்பொலி(ளி) வழங்குவோம்;
சீர்திருத்த முறையிலே சிக்கனம் பழகுவோம்;
சுற்றம் மாசில்லா சூழ்நிலை பேணுவோம்;
சிந்தையில் ஒளிநாளை செலுத்தியே மகிழுவோம்.
"அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்"

திரு. ரூபன் அவர்களின் தீபாவளி கவிதைப் போட்டிக்காக எழுதி பகிரப்பட்டுள்ளது. இதிலுள்ள பிழை பொறுத்து சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ள...
நன்றி.
நட்புடன்,
நடராஜன் வி.