- பாறைக்கருகே
தயங்கி நிற்கின்றன
இளம் ஆல விழுதுகள்
- வேகமாய் ஆடும் வேம்பு
கண்ணாடியறைக்குள்
சுழலும் மின்விசிறி
- ஆளுங்கட்சி, எதிர்கட்சி
பொதுக்கூட்டம்
திருட்டு மின்சாரத்தில்
- வந்து செல்லும்
பழகிய திருடன்
உறங்கும் நாய்
- சாலை விரிவாக்கம்
சாய்த்த மரங்களில்
கூடு தேடும் குருவிகள்