தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Thursday, 31 October 2013

தீபாவளி :"ஒளிகாட்டும் வழி"

"ஒளிகாட்டும் வழி"  

அன்பின் மொழியினாய் அறம்செய முயலுவோம்;
ஆசைகள் நீங்கிட ஆலயம் தொழுகுவோம்;
இயல்பின் ஒளிஎழ இன்னலை அகற்றுவோம்;
ஈகை பண்பினால் இனிப்பினை பகிருவோம்;
உழைப்பின் உன்னத மகத்துவம் உணருவோம்;
ஊரே மகிழ்ந்திட உறவினை பரப்புவோம்;
எளியோர் மகிழ்ந்திட இயன்றதை உதவுவோம்;
ஏழ்மை குறைந்திட ஏற்றத்தை  காணுவோம்;
ஐயம் அகன்றிட வையகம் போற்றுவோம்;
ஒளியின் வழியிலே இருளினை விலக்குவோம்;
ஓய்வை போற்றிட ஒலியினை சுருக்குவோம்;
ஔவியம் அகன்றிட அகல்ஒளி ஏற்றுவோம்;
அஃதே வழியினாய் நன்மையை பெருக்குவோம்;
சிவகாசி சிறுவர்க்கும் சிரிப்பொலி(ளி) வழங்குவோம்;
சீர்திருத்த முறையிலே சிக்கனம் பழகுவோம்;
சுற்றம் மாசில்லா சூழ்நிலை பேணுவோம்;  
சிந்தையில் ஒளிநாளை செலுத்தியே மகிழுவோம்.


"அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்"



திரு. ரூபன் அவர்களின் தீபாவளி கவிதைப் போட்டிக்காக எழுதி பகிரப்பட்டுள்ளது.  இதிலுள்ள பிழை பொறுத்து சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ள...


நன்றி.

நட்புடன்,
நடராஜன் வி.

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...