மனிதனின் வாழ்வு ஆங்கெழுந்து ஒளிவீசும் பரிதி ஒத்தாய் ஆழ்மனமோ கறுத்திருக்கும் கரியேயன்றோ? தீங்கிழைக்கும் அணுகுண்டை கண்டேனென்றாய்; தோன்றும் அத்தீயில் எரிவதும் நீயேயன்றோ? பாங்கெழிலாய் அண்டவெளிப் பாலமிட்டாய்; பாய்ந்தேகு முன்மனத்தை ஆள்வதென்றோ? ஓங்குமலை எல்லாமே கையிலென்றாய்; உன்னுள்ளே அடக்காத ஆசையுண்டே! ஒருநாளில் மறைந்துவிடும் குமிழாம் வாழ்க்கை; உயிர்க்குருவி கூட்டைவிட்டு பறந்தே ஏகும்! இறந்துவிழும் பிணங்களையே நேரில் கண்டும்; இறுமாப்பாய் இருந்திடுவேனென்றே வாழ்வாய்! இரைந்திரைந்து பொதுநலமே வாழ்க்கை என்றாய்; இருட்டறையில் தன்னலத்தை பேணுகின்றாய்! அருளொளியாய் புறம் பொலிய புதுக்கி நின்றாய்; அகந்தெரிந்தால் உள்ளொளிக்கும் உண்மை நிறமே! |
தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்
திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...
Sunday, 11 September 2011
தமிழ் கவிதை_1
Labels:
தமிழ் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மனிதனின் வாழ்வு என்கிற தலைப்பில் திரு வி.நடராசன் எழுதிய கழிநெடிலடி எண்சீர் அகவல் விருத்தம் மனிதன் என்கிற தலைப்பில் என்னால், 2004இல் எழுதப்பட்டது. முதலில் மரத்தடி யாகூ குழுவிலும், பின்னர் கூடல்.காம் தளத்திலும் பகிரப்பட்டு, தற்போது என்னுடைய வலைப்பூவான tyagas.wordpress.com, tyagas.blogspot.com ஆகியவற்றில் வலையேற்றப்பட்டுள்ளன. பாடலில் சொல்லப்பட்ட கருத்து சமூக மேம்பாட்டுக்காக என்பதால், இஃது இன்னும் பலரைச் சென்றடைந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சியே! ஆயினும் ஒரு கவிஞனுக்கு, அவனது கவிதை குழந்தை போல, எனவே வளரும் கவிஞர்கள் தமிழ்மீதான அன்புக்காக, தாங்களாகவே எழுதுவதுதான் தமிழின் வளர்ச்சிக்கு வழிகோலும். இல்லையெனில் நரம்பறுந்த வீணையென வாழ்க்கை ஆகிவிடும். பாடலின் அமைப்பிலும் தவறிருக்கிறது.
அன்பன்
பாவலர் இராஜ.தியாகராஜன்.
சரியான பாடல்:
ஆங்கெழுந்தே ஒளிவீசும் பரிதி ஒத்தாய்
.....ஆழ்மனமோ கறுத்திருக்கும் கரியேயன்றோ?
தீங்கிழைக்கும் அணுகுண்டை கண்டேனென்றாய்;
.....தோன்றும் அத்தீயில் எரிவதும் நீயேயன்றோ?
பாங்கெழிலாய் அண்டவெளிப் பாலமிட்டாய்;
.....பாய்ந்தேகு முன்மனத்தை ஆள்வதென்றோ?
ஓங்குமலை எல்லாமே கையிலென்றாய்;
.....உன்னுள்ளே அடக்காத ஆசையுண்டே!
ஒருநாளில் மறைந்துவிடும் குமிழாம் வாழ்க்கை;
.....உயிர்க்குருவி கூட்டைவிட்டு பறந்தே ஏகும்!
இருந்திறக்கும் பிணங்களையே நேரில் கண்டும்;
.....இறுமாப்பாய் இருந்திடுவேனென்றே வாழ்வாய்!
இரைந்திரைந்து பொதுநலமே வாழ்க்கை என்றாய்;
.....இருட்டறையில் தன்னலத்தை பேணுகின்றாய்!
அருளொளியாய் புறம் பொலிய புதுக்கி நின்றாய்;
.....அகந்தெரிந்தால் உள்ளொளிக்கும் உண்மை நிறமே!
கவிதை அருமை. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!