அமெரிக்காவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்ப் விளையாட்டு திடல்கள் உள்ளன. இங்கே, வயதானவர்கள் கோல்ப் விளையாடி தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கிறார்களாம்.
அங்குல அளவு முறையை கிரீஸ் நாட்டவர்களே முதன்முதலில்
கண்டுபிடித்தார்கள். கட்டை விரலின் அகலத்தைக் கொண்டு அளந்தார்கள். பிறகு ரோமானியர்கள் இதனை கணித முறையில் மாற்றி அங்குல அளவு முறையை முழுமைப்படுத்தினர்.
ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நபருக்கும் தலா 10 செம்மறி ஆடுகள் வீதம் இருக்கின்றன. அதனால் தான், அங்கு எங்கு பார்த்தாலும் மக்களைவிட ஆடுகள் அதிகம் காணப்படுகின்றன.
ஈரான் மன்னராக இருந்த ஷா, தங்கத்தால் ஆன கத்திரிக்கோலை கொண்டு தான் ரிப்பன் வெட்டி எந்த திறப்பு விழாவையும் தொடங்கி வைப்பார்.
திருமணத்தின்போது அட்சதை (அரிசி) தூவி வாழ்த்தும் முறை எகிப்திலும் இருந்தது. `உணவு கஷ்டம் இல்லாமல் நலமோடு நீண்ட காலம் மணமக்கள் வாழ வேண்டும்' என்பதுதான் அரிசி தூவி வாழ்த்துவதன் பொருள்.
திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்; லட்டு கிடையாது.
திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் “புளியோதரை”தான் பிரசாதம்; லட்டு கிடையாது.
அமெரிக்கர்களுக்கு தொலைபேசி இல்லையென்றால் ஏதோ இழந்தது போல் ஆகி விடுகிறார்கள். அங்கு 100-ல், 90 பேர் தொலைபேசி வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலோ 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.
1 comment:
//இந்தியாவிலோ 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.// 90 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கின்றன என்று செய்திகள் வருகின்றனவே? அவை யாரிடம் இருக்கும்?
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!