அமெரிக்க ராணுவத்தால் மட்டும் ஆரம்பத்தில் பயனபடுத்தப்பட்டுக் கொண்டிருந்த கணணி வலையமைப்பு அதாவது இன்டர்நெட் இன்று சிறு குழந்தை முதல் முதியவர் வரை கடை முதல் நாசா வரை பல்வேறு வடிவங்களில் பயன்பாட்டில் உள்ளது. அதன் வளர்ச்சி பாதையில் சில முக்கிய சம்பவங்களை பார்க்கலாம்.
1984:
Dr .John Postel என்பவரால் .com ,.org ,.gov ,.edu ,.mil என்பவற்றுக்கான எண்ணக்கரு உருவாக்கதிட்டம் என்பன குறித்து Internet Engineering Task போர்சே(IETF ) இன் வெளியீடுகளில் விரிவாக விபரிக்கப்பட்டிருந்தது.
1989:
The World எனும் இணையதள சேவை வழங்குனரால் முதன் முதலில் மக்களுக் கான வர்த்தக ரீதியான Dial -Up இணைய சேவை வழங்கப்பட்டது. அனால் முதலாவது ISP Netom என்றாலும் மக்களுக்கு ஆனது அல்ல.
1992:
Corporation for Education and Research Network (CREN ) World Wide Web இனை வெளி யிட்டது. NSFNET ( The National Science Foundation Network ) 44 .739 Mbps இக்கு தரமுரத்தப்பட்டது.
1993:
Marc Andreesson , NCSA , Illninois பல்கலைக்கழகம் சேர்ந்து "Mosaic for X " என்ற முதலாவது WWW இக்கான Graphical Interface இனை உருவாக்கினர். Mosaic for X அக்காலத்தில் முதலாவது பரவலான பாவிப்பில் இருந்த Web Browser ஆக இருந்தது.
1994:
Pizza Hut அவர்களது இணைய தளமூடான ஆர்டர் பண்ணுவதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர். இது தொடக்கத்தில் பிரபலமாகவிடினும் பின் ராக்கெட் வேகத்தில் மக்கள் மத்தியில் பிரபல்யமானது.பேசப்பட்டது
1995;
Pierre Omidyar என்பவரால் இணையதள வியாபாரம் அறிமுகப்படுத்தப்படது. பின்னாளில் இது eBay ஆக மாறியது. .gov , .edu தவிர்ந்தஇலவசமாக இருந்த அனைத்து டொமைன் களுக்கும் வருடாந்த கட்டான அறவீடு ஆரம்பமாகியது.
1996:
Hotmail ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு Microsoft ஆல் 40 கோடி டொலர் களுக்கு வாங்கப்பட்டது. Internet2 எனும் Network Of Research And Education Institutions உருவானது
2001:
wikipedia அறிமுகமானது. ஆரம்பத்தில் விக்கிபீடியா .com என இருந்தாலும் பின்னர் இது .org என மாற்றம் பெற்று இன்று உலகளாவிய ரீதியில் தனக் கென்று தனியான ஒரு இடத்தினை பெற்றுள்ளது.
2003:
Apple iTunes Store இனை ஆரம்பித்தது. அப்போது வெறும் 200 000 பாடல்களுடன் ஆரம்பிக்கப்பட்டாலும் 24 மணிநேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் மேலான பாடல்கள் விலையாகின.
2004:
1 .1 .2004 இல் yahoo hotamil 2MB எனும் Storage Capacity இனை வழங்கியபோது Google gmail இனை1GB என்ற கொள்ளளவு வசதியுடன் அறிவிப்பு செய்தது .அது அப் போது April fool joke என சிலரால் கருதப்பட்டது.
2005:
You tube ஆரம்பிக்கப்பட்டது. இணையதளமூடான வீடியோ களுக்காக இது உருவாக்கப்பட்டது. இது தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு Google இதனை 1.6 பில்லியன் டாலர்ஸ்களுக்கு youtube இனை வாங்கியது.
2006:
Dom Sagolla வினால் Twitter தளம் வெளியீடு செய்யப்பட்டது. இதே வருடம் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் உரியதாக இருந்த Facebook இல் யாரும் இணையலாம் என அறிவிக்கப்பட்டது.
2009:
தொலைபேசி ஊடான ஒலி பரிமாற்றத்தை விட Data பரிமாற்றத்தின் அளவு ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கிறது. உலகளாவிய ரீதியில் முதன் முறையாக Data பரிமாற்றத்தின் அளவு 1exa byte (1 billion giga bytes ) என்ற எல்லையை தாண்டியது.
No comments:
Post a Comment
இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!