தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Tuesday 20 December 2011

கவிதைகள் சில...

முள்ளின் திறமையை பார்
காலால்
மிதித்தவனை
கையால் எடுக்க
வைக்கிறது!

லுவான காரணங்கள்
வலுவான வெற்றியை
தேடி தரும்...

வாழ்வில்
தோல்வி அதிகம்
வெற்றி குறைவு
என வருந்தாதே ....
செடியில் இலைகள்
அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும்
ஒரு சில மலருக்கே
மதிப்பு அதிகம்.

ன் புன்னகையில்
என் வாழ்கையை
தொலைத்தேன்.
உன் மௌனத்தில்
என் இதயத்தை
தொலைத்தேன்.
ஆனால் ,
உயிரே உன் நினைவுகளை
மட்டும் தொலைக்க
முடியவில்லை...

லகத்தில்
உறவுகள் இறுதி வரை
வருமா என்று
தெரியாது.
ஆனால்,
உண்மையான நட்பு
இதயத்தின்
ஓசை கேட்கும்
வரை வரும்...

மெளனமாக தான்
அழுகின்றேன்
ஆனாலும்,
எப்படியோ தெரிந்துவிடுகிறது !
என்
கண்களுக்கு...

வாழ்வதும் , வெல்வதும்
ஒருமுறை தான்!
அது
யாருக்காக என்பது மட்டும்
தெரிந்தால்
வாழ்க்கையின்
அர்த்தம்  புரிந்துவிடும்!


கொண்டு செல்ல
எதுவும் இல்லை
உலகில்...
கொடுத்து செல்ல
எல்லாம் உள்ளது
உடலில்.
காலம் காத்திருப்பதில்லை
ஆனால் நம்மை
நேசிக்கும் உண்மையான
இதயம் நமக்காக
நிச்சயம் காத்திருக்கும்!

2 comments:

மகேந்திரன் said...

////வாழ்வில்
தோல்வி அதிகம்
வெற்றி குறைவு
என வருந்தாதே ....
செடியில் இலைகள்
அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும்
ஒரு சில மலருக்கே
மதிப்பு அதிகம்.////எனக்குப் பிடித்தது..
அற்புதமான வரிகள் நண்பரே.
வாழ்த்துக்கள்.

http://ilavenirkaalam.blogspot.com/2011/12/blog-post_19.html

V.Nadarajan said...

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. உங்கள் வசந்த மண்டபம் இளைப்பாருவதற்கான இனிய இடம். பகிர்விற்கு நன்றி.

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...