தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Saturday, 29 March, 2014

இலவச மொபைல் ரீசார்ஜ் பெறுவது எப்படி? பதிவு-2

நம்மில் பலர் இணையதளங்களில் வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே  பயன்படுத்துக்கின்றோம். ஆனால் சிலர் இந்த நேரத்திலும் பயன்(பணம்) ஈட்டும் தருணங்களாகவும் மாற்றிவருகின்றனர். அந்த வகையில் இணையத்தில் சுலபமான GKக்கு பதிலளித்து இலவச மொபைல் ரீசார்ஜ் பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.  இவற்றில் உங்கள் மொபைல் என்னுடன் சில சுயக்குறிப்புகளை பூர்த்தி செய்து Register செய்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் நெட்வொர்க்கிற்கு மட்டும். மேலும்,


AMULYAM:


இங்கு Register செய்வதன் மூலம்  கீழ்க்காணும் படத்தில் உள்ள பலன்களை பெறலாம்.


அதற்கான லிங்க்:
WAY2SMS :

இங்கு Register செய்வதன் மூலம்  கீழ்க்காணும் படத்தில் உள்ள பலன்களை பெறலாம். இலவச SMS அனுப்பும் வசதியையும் அளிக்கின்றன.


அதற்கான லிங்க்:


PAISAFY :

இங்கு Register செய்வதன் மூலம்  கீழ்க்காணும் படத்தில் உள்ள பலன்களை பெறலாம். அதற்கான லிங்க்:
http://paisafy.com/

மேற்கண்ட இணையதளங்கள் இலவச SMS அனுப்பும் வசதியையும் அளிக்கின்றன. அதற்கும் பைசாக்களில் பணம் அளிக்கின்றன. இவற்றில் பதிந்து குவிஸ் விளையாடுவதன் மூலம் பொது அறிவு (GK) வளர்வதுடன் குறைந்தது 5 அல்லது 6 நாட்களுக்கு ஒருமுறை குறைந்த மதிப்பு ரூ. 10 முதல் (Minimum denomination as per your mobile network)  ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். ஆகமொத்தம் மாதத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை (ரூ. 40 வரை அதற்கு மேலும் எண்ணிலடங்கா)

ரீசார்ஜ் செய்துக்கொள்ளலாம். மூன்று வெப்சைட் -ம் சேர்த்து குறைந்தது ரூ. 100 முதல்  இலவச மாத மொபைல் ரீசார்ஜ் செய்து செலவினை மிச்சப்படுத்தலாம். பொது அறிவினையும் வளர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு: மேற்கண்ட அனைத்தும் இணையத்தில் நேரத்தை பயனுள்ளவழியில் பயன்படுத்துவதற்கு மட்டுமே. அதிக நேரம் இணையத்தில் நேரத்தை செலவழிப்போர் பயன்படுத்திக்கொள்ளலாம். மற்றவர்கள் தவிர்க்கவும். அல்லது எதாவது ஒன்றை மட்டும் பயன்படுத்தவும்.

நன்றி. பதிவு பிடித்திருந்தால் கருத்து தெரிவித்துச் செல்லவும். அதிகப்பிடித்து மற்றவர்களும் பயன்படவேண்டும் என்று நினைத்தால் பகிர்ந்துக்கொள்ளவும்.

Sunday, 16 March, 2014

மாயமாகும் விமானங்களை பின்தொடரும் மர்மங்கள்:

கோலாலம்பூர் - பெய்ஜிங் விமான விபத்தைப் பற்றி இப்போது எல்லோரும் பேசுகிறோம். விமானம் புறப்பட்டபோது வானிலை நன்றாகவே இருந்தது. கடல் மட்டத்துக்கு மேலே 35,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது. விமானத்தில் நெருக்கடி ஏதும் இருந்ததற்கான அடையாளம் தரைக் கட்டுப்பாட்டு கோபுரங்களுக்கு வரவில்லை. விமானியும் ரேடியோ மூலம் அவசரச் செய்தி எதையும் சொல்லவில்லை. விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்கெல்லாம் ரேடாரிலிருந்து விலகிவிட்டது. விமானத்தின் கட்டுமானத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தால் விமானம் அப்படியே இரு துண்டுகளாக உடைந்திருக்கும் என்பது சிலரின் அனுமானம். விமானிகள் தவறு செய்திருக்கலாம்; பயங்கரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்றெல்லாம் சொல்வோரும் உண்டு.


பொதுவாக, விமான விபத்துகள் ஏற்படப் பல காரணங்கள் உண்டு. விமானத்தில் எரிபொருள் தீர்ந்துபோவது, இயந்திரத்தில் திடீரெனக் கோளாறு ஏற்படுவது, நடுவானில் மற்றொரு விமானத்தின் மீது மோதிவிடுவது, நடுவழியில் மலை அல்லது உயரமான கட்டிடங்கள் மீது மோதுவது, விமானி தூங்கிவிடுவது, விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வரும் கட்டளைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் விபத்தில் சிக்குவது, புயல் - மழையில் சிக்குவது, பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு வெடிவைத்துத் தகர்க்கப்படுவது என்று பல காரணங்களைப் பட்டியலிடலாம். ஆனால், விபத்து ஏன் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரமாக எதுவுமே கிடைக்காமல் - ஏன் விமானமே சிக்காமல் - நடந்த விபத்துகள் பல உண்டு.

உலகைச் சுற்ற நினைத்தவர் பயணம்

அட்லான்டிக் கடலின் மீது பறந்து, உலகைச் சுற்றிவரப் புறப்பட்ட அமீலியா இயர்ஹார்ட் 1937 ஜூலை 2-ம் தேதி விமானத்துடன் காணாமல் போனார். அவருக்கு வழிகாட்டியாக பிரெட் நூனன் என்பவரும் விமானத்தில் உடனிருந்தார். மத்திய பசிபிக்கில் ஹௌலேண்ட் தீவுக்கு அருகில் அவருடைய விமானம் காணாமல் போனது. எவ்வளவோ தேடியும் அவரும் கிடைக்கவில்லை, விமானமும் சிக்கவில்லை. அமெரிக்க அதிபர் பிராங்ளின் டி. ரூஸ்வெல்ட்டின் உளவாளியான அவரை ஜப்பானியர்கள் சிறைப்பிடித்துவிட்டனர் என்றனர் சிலர். ஜப்பானியத் தீவில் மலை மீது விமானம் மோதி, இயர்ஹார்ட் மட்டும் உயிர் பிழைத்துக் கீழே விழுந்திருப்பார், மணல் நண்டுகள் அவரைத் தின்றிருக்கும் என்றனர் சிலர். விபத்துக்குப் பிறகு உயிர் தப்பிய அவர், நியூஜெர்சிக்குச் சென்று பெயரை மாற்றிக்கொண்டு ரகசியமாக வாழ்கிறார் என்றனர் சிலர். வேற்றுக்கிரக வாசிகள் அவருடைய விமானத்தை மறித்து, அவரைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்றும் சிலர் நம்பினர்.

பெர்முடா முக்கோணம்

அமெரிக்க விமானப் படையில் புதியவர்களுக்குப் பயிற்சி தருவதில் அனுபவம் வாய்ந்தவர் சார்லஸ் டெய்லர். 1945 டிசம்பர் 5-ல், ஐந்து விமானங்களில் பயிற்சி விமானிகளை வழிநடத்திச் சென்றார். ஃப்ளோரிடா மாகாணத்தின் லாடர்டேல் கோட்டையிலிருந்து விமானங்கள் புறப்பட்டன. ஒன்றரை மணி நேரப் பயிற்சிக்குப் பிறகு, இளம் பைலட்டுகள் டெய்லரிடம் மன்றாடினர். தரையில் உள்ள எதுவுமே சரியாகத் தெரியவில்லை, தளத்துக்குத் திரும்பிவிடலாம் என்றனர். கடற்படைத் தளத்தை ரேடியோ மூலம் தொடர்புகொண்ட டெய்லர் தன்னிடமுள்ள இரு திசைகாட்டிக் கருவிகளும் பழுதாகிவிட்டன என்று அச்சத்துடன் கூறினார். விமான தளத்துக்குத் திரும்புவதற்குப் பதிலாக ஆறு விமானங்களும் திசை தவறி ஆளுக்கொரு மூலையாக எங்கோ பறந்தன. அப்போது பருவநிலையும் மோசமாகிக்கொண்டே வந்தது. டெய்லர், ஐந்து பயிற்சி பைலட்டுகள் ஆகியோருடன் விமானப் படைக் குழுவினர் எட்டுப் பேரும் அந்த விமானங்களில் இருந்தனர். அவர்களுடைய கதி என்னவானது என்று பார்த்து வர உடனே அனுப்பப்பட்ட மற்றொரு போர் விமானமும் அதேபோலக் காணாமல் போனது. இந்த மர்மத்தைத்தான் ‘பெர்முடா முக்கோண மர்மம்’ என்கின்றனர். இன்றுவரை இந்த மர்ம முடிச்சு அவிழவில்லை. பெர்முடா பலி கொண்டது இத்துடன் ஓயவில்லை.

ஸ்டென்டெக் மர்மம்

ஆர்ஜென்டீனாவின் போனஸ் அயர்ஸ் நகரிலிருந்து சிலியில் உள்ள சான்டியாகோ விமான நிலையத்துக்கு 1947 ஆகஸ்ட் 2-ல் ரெஜினால்ட் குக் ஒரு விமானத்தை ஓட்டிச்சென்றார். ஆண்டீஸ் மலைத் தொடரின் மீது பறந்த அந்த விமானம், சான்டியாகோ போய்ச் சேரவே இல்லை. ஆனால், விமானி ‘மோர்ஸ் கோட்’ என்ற தந்தி மொழியில் ‘ஸ்டென்டெக்’ (STENDEC) என்றொரு தகவலை அனுப்பினார். அதற்கு என்ன பொருள் என்று இன்றுவரை வெவ்வேறு விளக்கங்களை அளிக்கின்றனர். நாசவேலையால் விமானம் வெடித்தது என்றும் வேற்றுக்கிரகவாசிகள் தாக்கிவிட்டார்கள் என்றும் பேசிக்கொண்டார்கள். பனிப் பொழிவுகளின் ஊடே பறந்தபோது, பனிக்கட்டிகள் அதை அழுத்தி மலையில் புதைத்திருக்க வேண்டும் என்றும் ஊகிக்கப்பட்டது.

மீண்டும் பெர்முடா

அசோரஸின் சான்டா மரியா விமான தளத்திலிருந்து பெர்முடாவுக்கு 1948 ஜனவரி 30-ல் புறப்பட்ட அந்த விமானத்தில், இரண்டாவது உலகப் போரில் தீரச் செயல்கள் புரிந்த ஏர் மார்ஷல் சர் ஆர்தர் கானிங்காம் உள்பட 25 பயணிகள் அதில் இருந்தனர். அப்போது பருவநிலை சரியாக இல்லாததால், பலத்த காற்றில் சிக்கிவிடாமல் இருக்கக் குறைந்த உயரத்தில் பறந்து செல்ல முடிவுசெய்யப்பட்டது. இந்த விமானத்துக்கு வழிகாட்டி விமானம் ஒன்றும் முன்னால் பறந்தது. சுமார் 12 மணி நேரம் பறக்க வேண்டிய நீண்ட பயணம் அது. பின்னால் சென்ற விமானம் பாதையைவிட்டு விலகிப் பறந்தது. பெர்முடா செல்வதற்கு முன்னதாக பெருங்காற்றில் சிக்கியது. காணாமல் போனது. வழிகாட்டி விமானம் போய்ச் சேர்ந்துவிட்டது. பின்னால் சென்ற விமானத்தின் சிதைவுகளைக் கூடக் காணவில்லை.

இதேபோல, பெர்முடாவிலிருந்து ஜமைக்காவுக்கு 1949 ஜனவரி 17-ல் புறப்பட்டது அந்த விமானம். புறப்பட்டபோது நீலவானில் எந்த மழை மேகமும் இல்லை. காற்றிலும் ஏதும் கோளாறு இல்லை. விமானம் எந்தத் தொல்லையும் இல்லாமல்தான் புறப்பட்டது. ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களுக்கெல்லாம் விமான நிலையங்களுடன் தொடர்புகொள்வதில் அடுத்தடுத்துப் பிரச்சினைகள் தோன்றிக்கொண்டே இருந்தன. 20 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் எங்கே போனது, என்ன ஆனது என்று எவருக்குமே தெரியவில்லை. சுமார் ஒரு வார காலம் தேடிப்பார்த்துவிட்டு, தன் முயற்சியைக் கைவிட்டது அரசு.

அட்லி மர்மம்

பெர்முடாவில் 1948,1949-ல் நடந்த இரு விபத்துகளுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டு விமானங்களுமே பி.எஸ்.ஏ.ஏ. நிறுவனத் தயாரிப்புகள். “போர்ப் பயிற்சி பெற்ற ஒரு நாசக்காரரே இந்த இரு விபத்துகளுக்கும் காரணம். இந்தச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடர வேண்டாம் என்று பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லி தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டார்” என்று பி.எஸ்.ஏ.ஏ. நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டான் பென்னட் குற்றம்சாட்டினார். இதிலும் மர்மம் விலகவில்லை.

வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதல்

பொதுவாக, இப்படிப்பட்ட விபத்துகளின்போது நம்பக்கூடியதும் நம்ப முடியாததுமாகப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுவது உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று, வேற்றுக்கிரகவாசிகளின் தாக்குதல். இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் ஒருபுறமிருந்தாலும், இன்னும் மர்ம விமான விபத்துகள் தொடர்வதன் மூலம் நமக்குச் சுட்டிக்காட்டப்படுவது ஓர் உண்மையைத்தான். தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறிவிட்டதாக நாம் கூறிக்கொண்டாலும், அதன் போதாமை உள்ள வெற்றிடம் இன்னும் பெரியதாக இருக்கிறது என்பதே அந்த உண்மை!

via தி இந்து

Sunday, 9 March, 2014

உணவுப் பொருட்களின் தமிழ் பெயர்கள்:

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில உணவுப்பொருட்களின் தமிழ்ப்பெயரினை இங்கே பார்ப்போம்...Friday, 7 March, 2014

பேஸ்புக் வாட்ஸ்அப்-ஐ வாங்கியவுடன் செய்த வேலை:

பேஸ்புக் வாட்ஸ்அப்-ஐ வாங்கியவுடன் அதன் தலைமை செயல் அதிகாரி செய்த வேலை என்னவென்றால் "கடைசியாக இருந்த இடம்" என்று ஒருவரின் வாட்ஸ்அப்(மொபைல் பயன்பாடு) உபயோகத்தை ஜி.பி.எஸ் தொழில் நுட்பத்தை கொண்டு அறியுமாறு செய்திருக்கிறார். 

இது அதன் தலைமை மார்க் சக்கர்பெர்க்-ன் எண்ணப்படி, பெற்றோர் அவர்களின் குழந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் இடத்தினை அறிந்து கொள்ளவும், தம்பதிகள் அவரவர்களின் இடத்தினை அறிந்துக் கொள்ளவும் ஏற்பாடாக வாட்ஸ்அப்/பேஸ்புக் பயன்படுத்துவோர் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இணைக்கப்பட்டுள்ளதாக அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


உதாரணம்:
- Hi mom, i m on ma way to the library see u
later... 

[last seen 02.54pm @ PVR cinemas .]

மேற்கண்ட செய்தியில்,

ஒருவர் தன் அம்மாவிடம், தான் நூலகத்திற்கு செல்வதாகவும், பிறகு சந்திப்பதாகவும் தெரிவிக்கிறார்.

ஆனால் நிஜத்தில் அந்த நேரத்தில் (02:54PM) PVR சினிமாஸ்-ல் இருப்பதாக காட்டிவிடுகிறது.

வாட்ஸ்அப் பயன்படுத்துரிங்களா? வீட்டுக்கு தெரியாம ஊர் சுத்துரிங்களா? இனி கஷ்டம் தான்!!!

இலவச மருத்துவத் தகவலுக்கு 104!


விபத்தோ, எமர்ஜென்ஸியோ.. உடனே நாம் அழைக்கும் எண் 108! அழைத்ததும் உதவிக்கு ஓடி வரும் ஆம்புலன்ஸ். அதே போல இப்போது இன்னொரு எண்ணை, அவசரகால சிகிச்சை மற்றும் மேலாண்மை நிறுவனமான 'GVK-EMRI’ உடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு. உடல்நிலை சரியில்லையா? வயிற்று வலி, தலை வலியா? காய்ச்சலா? 104 - என்ற எண்ணுக்கு அழைத்தால், நமக்கு தேவையான மருத்துவ அறிவுரைகள், தகவல்கள், ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட மருத்துவரிடம் பெற்றுத் தருவார்கள். மேலும், ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு அருகே எந்த ரத்த வங்கி இருக்கிறது என்ற தகவல், அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் சிடி, எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர்கள், புதிய நோய்த்தொற்று பற்றிய தகவல்கள் மற்றும் மக்களுக்குத் தேவையான மருத்துவத் தகவல்கள் என அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது இந்த 104 சேவை. மேலும் 108-ஐ அழைத்து ஆம்புலன்ஸ் வரத் தாமதமானால், பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டிய முதல் உதவி பற்றியும் தகவல் கிடைக்கும். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவைக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

Wednesday, 5 March, 2014

உழைப்பே உயர்வு:

     ஆனந்தபுரம் என்ற ஊரில் கந்தன், குகன் என்ற இரு நண்பர்கள் வசித்து வந்தனர். கந்தன் சிறு விவசாயி; பெற்றோர்களை இழந்தவன். தன் உழைப்பின் மூலம் முன்னேற வேண்டும் என்று நினைப்பவன். குகனோ தனது பரம்பரை சொத்துக்கொண்டு வாழ்ந்தால் போதும் என்று கருதுபவன். எனவே எந்த வேலையும் செய்யாமல் சுற்றிவந்தான். கந்தன் தன் தோட்டத்தில் விளைந்த பொருட்களைகொண்டு போய் சந்தையில் விற்று அதில் கிடைத்த வருவாயினைக் கொண்டு குடும்பத்தினை நடத்தி வந்தான். இருவரும் தங்கள் வாழ்க்கையை தத்தம் பாணியில் வாழ்ந்து வந்தனர்.


இருவரும் நண்பர்களாக இருந்தாலும் குகன் வசதி வாய்ந்தவன் என்றபோதிலும், கந்தன் மீது சிறுவெறுப்பு கொண்டிருந்தான். காலம் நகர்ந்து கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் குகனின் தந்தை கடன் சுமையால் இறக்க நேரிட்ட போதும் அவன் நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏதுமின்றி தனியொரு மனிதனாக குகன் நின்றதால் கந்தன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று தங்க இடம் கொடுத்தான். விவசாயத்தில் அதிகம் கிடைக்காது நாம் வியாபாரம் செய்யலாம் என்று குகன் கந்தனுக்கு அறிவுரைக் கூறி, சிறு வணிக வியாபாரியிடம் கூட்டிச் சென்றான். தந்திரமாக கந்தனின் வீடு உள்ளிட்ட நிலத்தினை வியாபாரத்தில் நஷ்ட கணக்கு காட்டி பறித்து கந்தனை ஊரைவிட்டே போகச் செய்தான்.

     நண்பன் குகன் செய்த துரோகத்தினை எண்ணி நொந்தவாறே, கந்தன் பக்கத்து ஊருக்கு சென்று எதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று எண்ணினான்.  தன் வீட்டிலிருந்து அரிவாள், ஏர்கலப்பை மட்டும் எடுத்துக்கொண்டான். இடைப்பட்ட காட்டினைக் கடந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர் அலறும் சத்தம் கேட்டு அந்த இடம் நோக்கி விரைந்து வந்தான். அப்போது அங்கே ஒரு சிங்கத்தின் பிடியில் ஒருவர் போராடிக்கொண்டிருந்தார். கந்தன் உடனே பாய்ந்து சிங்கத்தினை ஏர்கலப்பையால்  அடித்து விரட்டினான். உடனே காலங்கள் உருண்டோடின. இருவரும் தங்களுக்குள் அறிமுகம் ஆகினர். சிங்கத்தின் பிடியில் மாடியிருந்தவன் தன் பெயர் கண்ணன் என்று அறிமுகம் செய்து கொண்டான். நான்கு ஊர் தள்ளி தன் ஊர் உள்ளதாகவும், இறக்கும் தருவாயில் காட்டிற்கு அருகில் தன் நிலம் உள்ளதைப்பற்றி சொன்னதால் பார்க்க அங்கே வந்ததாகவும் கூறினான். கந்தன், கண்ணன் அந்த குறிப்பிட்ட இடத்தினை நோக்கி நடந்தனர். அந்த இடம் இயற்கை நீரூற்றுடன் பசுமையாக காட்சியளித்தது. கண்ணன் தன் வீட்டிலிருந்து இந்த இடம் தூரமாக இருப்பதால் எப்படி இரண்டையும்  சமாளிக்கப் போகிறேன் என்றவாறே, கந்தனைப்பற்றி கேட்டான். கந்தன் தன் ஊரிலிருது வந்ததையும், குகன் ஏமாற்றியதையும் விளக்கமாக கூறினான். அப்போது கண்ணனுக்கு ஒரு யோசனை தோன்றியது. 


     அதன்படி, கந்தன் தன் நிலத்தில் விவசாயம் பார்த்துகொண்டு இங்கேயே தங்கலாம் என்று கூறினான். மேலும் தேவையான விதை பொருட்களை தானே தருவதாகவும் சொன்னான். விளையும் பொருட்களை விற்று வரும் பணத்தினை இருவரும் பங்கிட்டு கொள்ளலாம் என்று ஒப்பந்தம் செய்தான். அதை ஒத்துக்கொண்ட கந்தனும் நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களுடன், காய்கறிகளையும் பயிர் செய்தான். வருடத்திற்கு இரு முறைமட்டும் விதை கொடுப்பதும், அதன் மூலம் பயிராகி, கிடைத்தவற்றை தன் ஊர் சந்தையில் விற்று லாபம் பிரிப்பதற்கும் கண்ணன், கந்தனிடம் வந்தான். இப்படியே இருவரின் நட்பு  வளர்ந்தது. நாட்களும் உருண்டோடின.


     கந்தன் தனி மனிதன் என்பதால் அவனுக்கு விரைவில் மணம்முடிக்க எண்ணி தன் ஊரில் உள்ள லக்ஷ்மியை பற்றி சொன்னான். கந்தன், லக்ஷ்மி திருமணம் கண்ணனின் முன்னிலையில் நடந்தேறியது. சில வருடம் கழித்து கந்தனுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. முருகன் என்று பெயர் சூடி வளர்த்தனர். இதற்கிடையே, கண்ணன் தன் பிள்ளைகளின் மேற்படிப்பிற்காக வேறு ஊர் செல்ல தீர்மானித்தான். தன் நிலைப்பாட்டினை கந்தனிடம் சொல்லி அவன் கருத்தினைக் கேட்டான். மேலும் வெளியூர் செல்ல பணம் தேவைப்படுவதால் காட்டின் அருகே கந்தன் பயிரிட்ட நிலத்தினை அவனே ஒரு தொகைக்கு வாங்கிக்கொள்ள விருப்பமா என்றும் கேட்டான். கந்தனும் தான் சேமித்து வைத்திருந்த பணத்தினைக் கொண்டு கண்ணனின் நிலத்தினை வாங்கி தன் சொந்த நிலமாக்கினான். மேலும் கந்தன் தனக்கு இவ்வளவு நாட்களாக பயிர் செய்ய அனுமதித்த நண்பன் கண்ணனுக்கு நன்றி சொல்லி பிரியாவிடை கொடுத்து அனுப்பிவைத்தான். அந்த இயற்கை எழிலுடன் கந்தனின் விவசாயத்தினால் செழிப்பும் பெற்ற இடம் காட்டின் அருகே சிறப்பாக வளர்ந்து வந்தது. விவசாயத்தில் பல புதுமையான வழிமுறைகளை புகுத்தி இயற்கை விவசாயத்தின் பெருமையை உலகிற்கே பறைசாற்றினான் கந்தன். இடையில் குகன் அனந்தபுர மக்களை ஏமாற்றியதால், அவர்களால் கொல்லப்பட்டு இறந்ததை அந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் மூலம் கேள்விப்பட்டு வருந்தினான்.  


     மேலும் அருகில் உள்ள கிராம மக்களும் கந்தன் வசித்த பகுதிக்கு நாடோடிகளாக வந்து விவசாயப் பணியில் ஈடுபட்டதால் அந்த பகுதி மேலும் செழிப்படைந்தது. கந்தன் தன் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். மேலும் ஊர் மக்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். அந்த பகுதி கந்தனின் உழைப்பினால் உருவானதால் பின்னாளில் கந்தன்புரம் என்று அழைக்கப்பெற்றது. ஒரு ஊரிலிருந்து தனி மனிதனாக வந்து, மற்றொரு ஊரையே உருவாக்கிய பெருமையை தந்தது கந்தனின் உழைப்பு.உழைப்போம்! உயர்வோம்!!


இந்த கதையானது வெட்டிப்ளாக்கர்ஸ் வலைத்தளத்தின் சிறுகதைப்

போட்டிக்காக என்னால் எழுதி பகிரப்பட்டது...

நன்றி!

என்றும் அன்புடன்,

வி.நடராஜன்
http://vienarcud.blogspot.com/

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...