தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Friday, 28 September, 2012

நகைச்சுவை நேரம்:-

செந்தில்: அண்ணே...அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...? ஹார்ட்வேர்னா என்னன்னே....?
கவுண்டமணி: அடே ப்ளூடூத் மண்டையா.......'செடி'ய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு... 'மரத்த' புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு.... இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு 'ஆல் இன் ஆல்' அழகு ராஜா தேவைங்குறது......
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ராப்பிச்சை.., இது என்ன பத்திரிகை?"
"என் நகைக்கடை திறப்புவிழா பத்திரிகைம்மா அவசியம் வந்திருங்க".
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ எப்படி கண்ட்ரோல் பண்ணுவே?
மகன் : டூத் ப்ரஷினால டாய்லெட் சுத்தம் செய்வேன்.
தந்தை : அதனால எப்படி கோபம் கட்டுப்படும்!!!
மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே. ஹி..ஹி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
காதலி: ஒரு அழகான கவிதை சொல்லுடா.
காதலன்: உன்னை கண்டதும் என்னை மறந்தேன்.
காதலி: அப்புறம்?
காதலன்: உன் தங்கையை கண்டதும் உன்னையே மறந்தேன்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாமனார்: மாப்பிள்ளைக்கு குழந்தை மனசுன்னு சொன்னீங்க.. அதுக்காக இப்படியா..?
தரகர்: ஏன் என்ன பண்ணினாரு?
மாமனார்: பொண்ணு பார்க்கும் போது 'மாமா பிஸ்கோத்து" வேணும் என்று தட்டுல வச்சிருந்த பிஸ்கட் பாக்கெட்ட கேட்குறாரு...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"ஆரம்பத்துலே படத்துக்கு பத்துக்கோடிதானே பட்ஜெட் சொன்னீங்க, இப்போ இருபதுன்னு சொன்னா எப்படி? எதற்கு?"
"ஒருவேளை படம் ஓடாட்டி படத்தை வாங்கினவங்களுக்கு திருப்பிக் கொடுக்கறதுக்காகதான் பட்ஜெட்டுல ரீஃபண்ட் திட்டம் வச்சிருக்கோம்!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"வேலை எல்லாம் முடிச்சிட்டுப் போன உங்க வீட்டு வேலைக்காரி, திடீர்னு திரும்பவும் வந்துட்டுப் போறாளே...  ஏன்?"
"பக்கத்து வீட்டைப் பத்தி ஏதாவது ஃபிளாஷ் நியூஸ் இருக்கும்...."
--------------------------------------------------------------------------------------------------------------------------------------                                வக்கீல்: "உங்க கணவரை டைவர்ஸ் பண்ண என்ன காரணம் சொல்லப்போறீங்க மேடம்!"
கிளையண்ட்: "போலி கணவர்னு கேஸ் போட்டா கேட்சிங்கா இருக்குமே!"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
"கபாலி திரும்பவும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கப் போறானாம் ஏட்டய்யா..."
"அவன்கிட்ட வாங்கற மாமூல் பணம், அவனுக்கு மொய் வைக்கவே சரியாப் போயிடும் போலிருக்கே...!"
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
"என்னுடைய கல்யாண நாள் வரும் போதெல்லாம் உங்க ஞாபகம் தான் சார் வரும்.."
"எதனால?"
"நீங்க ரெண்டு பந்தியில் சாப்பிட்டும் மொய் எழுதாம போனீங்கல்ல.. அதனால!"
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------- "சே.. அரை மணி நேரமா பேசிக்கிட்டே இருக்காரு.."
"பேசட்டுமே சார்... நம்ம கட்சி பிரமுகர்தானே.."
"நீங்க வேற... அந்த ஆள் மைக் டெஸ்ட் பண்றவன் சார்.."
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா....

அனைத்தும் கலக்கல்...

நன்றி...

V.Nadarajan said...

மிக்க நன்றி...

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...