தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Thursday, 31 October, 2013

தீபாவளி :"ஒளிகாட்டும் வழி"

"ஒளிகாட்டும் வழி"  

அன்பின் மொழியினாய் அறம்செய முயலுவோம்;
ஆசைகள் நீங்கிட ஆலயம் தொழுகுவோம்;
இயல்பின் ஒளிஎழ இன்னலை அகற்றுவோம்;
ஈகை பண்பினால் இனிப்பினை பகிருவோம்;
உழைப்பின் உன்னத மகத்துவம் உணருவோம்;
ஊரே மகிழ்ந்திட உறவினை பரப்புவோம்;
எளியோர் மகிழ்ந்திட இயன்றதை உதவுவோம்;
ஏழ்மை குறைந்திட ஏற்றத்தை  காணுவோம்;
ஐயம் அகன்றிட வையகம் போற்றுவோம்;
ஒளியின் வழியிலே இருளினை விலக்குவோம்;
ஓய்வை போற்றிட ஒலியினை சுருக்குவோம்;
ஔவியம் அகன்றிட அகல்ஒளி ஏற்றுவோம்;
அஃதே வழியினாய் நன்மையை பெருக்குவோம்;
சிவகாசி சிறுவர்க்கும் சிரிப்பொலி(ளி) வழங்குவோம்;
சீர்திருத்த முறையிலே சிக்கனம் பழகுவோம்;
சுற்றம் மாசில்லா சூழ்நிலை பேணுவோம்;  
சிந்தையில் ஒளிநாளை செலுத்தியே மகிழுவோம்.


"அனைவருக்கும் இனிய தீபாவளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்"திரு. ரூபன் அவர்களின் தீபாவளி கவிதைப் போட்டிக்காக எழுதி பகிரப்பட்டுள்ளது.  இதிலுள்ள பிழை பொறுத்து சுட்டிக்காட்டவும் திருத்திக்கொள்ள...


நன்றி.

நட்புடன்,
நடராஜன் வி.

18 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கவிதை அருமை... இணைப்பை நடுவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்... கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

V.Nadarajan said...

மிக்க நன்றி...

Ranjani Narayanan said...

அகர வரிசையில் நாம் செய்ய வேண்டியதை கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்.
//சிவகாசி சிறுவர்களுக்கும் சிரிப்பொலி(ளி) வழங்குவோம் என்ற வரிகள் உங்கள் சமூகச் சிந்தனையைக் காட்டுகிறது.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

V.Nadarajan said...

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள். மிக்க நன்றி மேடம்...

2008rupan said...

வணக்கம்

தங்களின் மின் அஞ்சல் சுமந்த கவிதை வந்து கிடைத்து விட்டது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது தங்களின் போட்டிக்கான கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்.

போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.....

என்பக்கம் புதிய பதிவாக கவிதைப்போட்டியில்பங்குபற்றியவர் தகவல் விபரம்-http://2008rupan.wordpress.com

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

V.Nadarajan said...

தங்கள் வாழ்த்திற்கும், வருகைக்கும் மிக்க நன்றி சார்...

இதுபோன்ற தங்கள் முயற்சிகள் தமிழினை விரும்புவோருக்கு ஊக்கம் தருபவையாக விளங்குகின்றன.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


நன்றி.

Ranjani Narayanan said...

போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!

இளமதி said...

வணக்கம் சகோதரரே!

ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில்
வெற்றி பெற்றமைக்கு நல் வாழ்த்துக்கள்!

சிறந்த கருத்துள்ள கவிதை! அருமை!

V.Nadarajan said...

வெற்றிபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி. அதைவிட தங்கள் வாழ்த்துக்கள் கிடைக்கபெற்றதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி அம்மா. @ Ranjani Narayanan

V.Nadarajan said...

மகிழ்ச்சி... தங்கள் வாழ்த்துக்களுக்கு என்னுடைய வணக்கங்கள் மேடம். உங்கள் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி. @ இளமதி

கிரேஸ் said...

தீபாவளிக் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்!

V.Nadarajan said...

தங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி @ கிரேஸ்

Iniya said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள்...!
அருமை அருமை....! ரசித்தேன்....!

தொடர வாழ்த்துக்கள்.....!

V.Nadarajan said...

வாழ்த்திற்கு மிக்க நன்றி @ Iniya

கி. பாரதிதாசன் கவிஞா் said...


வணக்கம்

நல்ல தமிழ்த்தேனை நாளும் பருகிடுவாய்
வல்ல கவிதை வடித்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

V.Nadarajan said...

தங்கள் கருத்திற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி... @ கவிஞர் கி. பாரதிதாசன்.

2008rupan said...

வணக்கம்
தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் வெற்றியடைதமைக்கான சிறப்புச்சான்றிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தங்களின் கையில் வந்து கிடைத்தவுடன் rupanvani@yahoo.com
dindiguldhanabalan@yahoo.com இந்த இரு மின்னஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

V.Nadarajan said...

ஐயா,

வணக்கம்.

தாங்கள் அனுப்பிய (தீபாவளி கவிதைப் போட்டி) சான்றிதழ் வந்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி.


மிக்க நன்றி.

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...