தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Tuesday 17 February, 2015

மருத்துவ குறிப்புகள்: உடல் அழகு

* உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது உடல் எடையை குறைக்கும்.   

* இஞ்சியை இடித்து சாறு எடுத்து பின் அதை அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.பின் இதை காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடுவது உறுதி. 

* வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்தே குளிக்க வேண்டும்.


* கோதுமை மாவுடன் தயிரைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளியுங்கள்.

* ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

* பாலாடையுடன் கடலை மாவை சேர்த்து கண், புருவம் மற்றும் உதடுகளைத் தவிர்த்து முகத்தின் இதர பகுதிகளில் பூச வேண்டும். 5 நிமிடங்கள் கழித்துக் குளித்தால் சருமம் மென்மையாக மாறும்.

* பீட்ரூட்டை சிறு துண்டு களாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட பீட் ரூட் பேஸ்ட்டை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங் கள் கழித்து சோப்பை உபயோகித்தோ அல்லது கடலை மாவை உபயோகித்தோ முகம் கழுவ வேண்டும்.

* சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக்கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

* மஞ்சள் தூள், சந்தனப் பொடி மற்றும் ஆலிவ் எண்ணை கலந்த கலவையை உடலில் பூசிக் கொள்ள வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்க வேண்டும்.

* பாலை உபயோகித்து சருமத்தை மசாஜ் செய்ய வேண்டும். பாலின் ஈரப்பதம் சருமத்தை மிருதுவாக்குகிறது.

* அறையில் எப்போதும் ஈரப்பதம் நிலவுமாறும், அறை வெப்ப நிலை அதிகமாக இல் லாதவாறும் பார்த்துக் கொண்டால் சருமம் உலர்ந்து போகாது.

* வெந்நீரில் குளிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிப்பதில்லை. நீண்ட நேரம் `ஷவரில்` நிற்பது சருமத்துக்கு நல்லது. குளித்த பிறகு துண்டை வைத்து முரட்டுத் தனமாக உடம்பை துடைக்கக் கூடாது. மென்மையாக உடம்பின் மீது துண்டை ஒற்றி எடுக்க வேண்டும்.

* வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றையும், தினமும் மாறி மாறி தொடர்ந்து குடித்து வர உடல் எடை படிபடியாகக் குறையும். உடல் அழகு பெறும்.   

* கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

* பாலும், எலுமிச்சை சாறும் கலந்த கலவையை முகத்தில் பூசி இயற்கையான முறையில் `பிளீச்` செய் யலாம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள குறிப்புகள்... நன்றி தோழரே...

V.Nadarajan said...

தங்கள் வருகைக்கும், அன்பான கருத்திற்கும் நன்றி...

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...