தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Tuesday 25 October, 2011

~தகவல் சுரங்கம்~

காந்தி குல்லாவின் கதை:
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதப் போராட்டத்தினால், இந்தியாவில் காந்தி குல்லா பிரபலமாகி விட்டது. இதனுடைய பெயர் "காந்தி குல்லா'. காந்தியடிகள் இதனை ஓர் ஆண்டு மட்டுமே அணிந்திருந்தார். காந்தியடிகள் தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்த போது, குஜராத்தின் கத்தியவார் முறைப்படி மிக நீண்ட துணியை தலைப் பாகையாக அணிவது வழக்கமாகும். 1920ல் ஒத்துழையாமை இயக்கத்தின் போது, அந்த கத்தியவார் தலைப்பாகைக்கு பதிலாக கதர் துணியால் ஆன குல்லாவை அணிவது என உறுதி மொழி எடுத்தார். 1921 செப்டம்பர் 22ல் மதுரையில் முழங்கால் அளவு ஆடை மட்டுமே அணிவது என்ற உறுதிமொழி எடுத்த போது, கதர் குல்லாவை கைவிட்டார். அதன் பிறகு அணியவே இல்லை.தமிழகத்திலும் சத்தியமூர்த்தியைத் தவிர, வேறு எந்த காங்கிரஸ் தலைவரும் காந்தி குல்லாவில் கவனம் செலுத்தவில்லை.

போரால் வளரும் பொருளாதாரம்:
போர் வருகின்றதோ இல்லையோ, ஆனால் ஆயுதங்கள் வாங்கி இருப்பு வைக்க வேண்டிய கட்டாயம் எல்லா நாடுகளுக்கும் உள்ளது. ஏனெனில் பட்ஜெட்டில் ஆயுதச் செலவைக் குறைத்தால், பாதுகாப்பில் அக்கறை இல்லாத அரசு என எதிர்க்கட்சிகள் "ஏற்ற இறக்கமாக' பேசும். வளர்ந்த நாடுகளின் பெரும்பகுதி வருவாய், ஆயுத விற்பனையில் தான் வருகிறது. வளரும், பின்தங்கிய நாடுகளின் பெரும் பகுதி செலவு, ஆயுதம் வாங்குவதில் தான் உள்ளது. உலகிலேயே ஆயுதங்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தான் உள்ளது. 9 சதவீத ஆயுதங்களை இந்தியா தான் வாங்கியுள்ளது. இந்தியாவில் வாங்கப்பட்ட ஆயுதங்களில் 82 சதவீதம் ரஷ்யாவில் இருந்து தான் இறக்குமதி ஆகியுள்ளது. ஆயுத இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் சீனாவும், அதே இடத்தில் தென் கொரியாவும் உள்ளன. மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.
நன்றி: தினமலர்

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...