தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Wednesday, 9 November, 2011

இப்போதைய நிலையில் கூடங்குளம் விஷயத்தில் என்ன தேவை?

கூடங்குளம் அணுமின்நிலையம் தான் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் என்ற கூற்று ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் மக்களின் சிந்திக்கும் திறனும், எதிர்த்து உண்ணாநோன்பு இருக்கும் அளவிலான செயலும் ஏன் கட்டுமான பணிகள் ஆரம்பித்த பொழுதில் ஏற்படவில்லை என்பது தான் புரியாத புதிராக உள்ளது. கட்டுமான பணிகள் மாயாஜால வகையில் மறைக்கப்பட்டு செய்து தற்போது தான் கூடங்குளம் அணுமின்நிலையம் வெளி கொணரப்பட்டுள்ளது என்று கூறுவதற்கில்லை. எனவே மக்கள் தூண்டு சக்திகள் ஏன் மக்களுக்கு முன்னரே உணர்த்தவில்லை. வெளிநாட்டு அழிவு உதாரணங்கள் கூறும் சான்றோர்கள் அவற்றையெல்லாம் அரசானது கூடங்குளம் அணுமின் நிலைய தொடங்க திட்டமிட்டிருந்த போதே மக்களுடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிக்கவில்லை. எதிர்ப்பதற்கு ஏற்ற நேரம் பார்த்து இருந்தது ஏன்? அதைவிட முக்கியமானது அந்த இடம் முழுவதும் அரசுடையது அல்ல. பொது மக்களின் நிலங்கள் கையகமும் அடக்கம். இப்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் நிலம் கொடுத்திருக்காமலேயே  எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம். இந்த தற்போதைய எதிர்ப்புக்கு பின் உள்ள வெளி(நாட்டு) சக்திகளின் நோக்கம் மக்களின் நலன் அல்ல. இந்தியாவின் வளர்ச்சி பாதையில் குறுக்கிடுவதே ஆகும். இதை அனைவரும் உணர வேண்டும்.

மக்கள் அரசு சொல்லும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியா என்று சிந்திக்க வேண்டும். அரசும், கூடங்குளம் அணுமின்நிலைய நிர்வாகமும் மக்களின் ஐயப்பாடுகளுக்கு முறையான விளக்கம் தரவேண்டும். இவ்வளவு செலவு செய்து கட்டிமுடிக்கும் தருவாயில் எதிர்ப்பது எதற்கு? மக்கள் வரிப்பணத்தில் தான் இவையனைத்தும் செய்யப்படுகின்றன. மென்மேலும் விவாதங்களும், போராட்டங்களும் நடத்துவதைவிட விளக்கங்களும், சுமூகனமான தீர்வுகளுமே இப்போதைய நிலையில் கூடங்குளம் அணுமின்நிலைய விஷயத்தில் தேவை.

2 comments:

Rathnavel said...

அருமையான பதிவு.
எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.

V.Nadarajan said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...