தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Thursday, 3 November, 2011

பேரழிவுகளை தாங்கக்கூடியது கூடங்குளம் அணுமின்உலை...

இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படக்கூடிய பேரழிவுகளை எதிர்கொள்ளும் விதத்தில் கூடங்குளம் அணுமின் உலை அமைக்கப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், கூடங்குளம் அணுமின் உலை 6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தையும் தாங்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சுனாமிகளை ஆராய்ந்து, சுனாமியால் அணுஉலைகள் பாதிக்கப்படாத வகையில், இந்த அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இயற்கை பேரழிவுகள் மட்டுமின்றி, மனிதர்களால் ஏற்படக்கூடிய பேரழிவுகளையும் தாங்கும் விதத்தில் அணுஉலை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உலக வர்த்தக மைய கட்டட தாக்குதலுக்கு முன்பாகவே இது திட்டமிடப்பட்டதாக கூறினார். கூடங்குளம் அணுமின் உலை பிரச்னையால் இந்திய ரஷ்ய உறவுகள் பாதிக்கப்படாது என்றும், மக்களுக்கு அணுஉலையால் பாதிப்பு ஏற்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அணுஉலை மேனேஜர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார். 

நன்றி: தினமலர் செய்தி

4 comments:

Anonymous said...

அணுமின் நிலையங்களை குறித்து மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவையும் பாருங்கள்
http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_22.html

கதிரியக்கத்தை குறித்த தகவல்களுக்கு
http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_18.html

அணுமின்சாரம் தேவையா என்ற தகவலுக்கு
http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_16.html

நன்றி

V.Nadarajan said...

உங்கள் கட்டுரை அருமை. உங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி @இருதயம்

அருள் said...

அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html

V.Nadarajan said...

உங்கள் வருகைக்கும்,பசுமைப் பக்கங்கள் வலைப்பூ கருத்திற்கும் நன்றி. கூடங்குளம் அணுமின்நிலையம் தான் தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் என்ற கூற்று ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் மக்களின் சிந்திக்கும் திறனும், எதிர்த்து உண்ணாநோன்பு இருக்கும் அளவிலான செயலும் ஏன் கட்டுமான பணிகள் ஆரம்பித்த பொழுதில் ஏற்படவில்லை என்பது தான் புரியாத புதிராக உள்ளது. கட்டுக்கதையோ, உண்மைக்கதையோ நமக்கு இப்போதைய தேவை ஒன்று தான். பிரச்சினைக்கு உரிய சுமூக தீர்வு. @அருள்

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...