தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Wednesday 14 December, 2011

+தன்னம்பிக்கையின் வெற்றி (ஆப்ரகாம் லிங்கன்)+

லகில் எத்தனையோ பேர் தோன்றி மறைகிறார்கள். ஆனால் அதில் சிலர் மட்டுமே வெற்றி பெற்றுப் பிறந்ததன் பெருமை அடைகிறார்கள். நம்மில் பலருக்கு வெற்றியை அடைய வேண்டும் என்று ஆசை கொள்கிறோம். ஆனால் ஏன் நம்மால் மட்டும் அடைய முடியவில்லை? பலமுறை முயன்றும் கூட !

காரணம் நம்மிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, எப்பொழுது இந்தத் தாழ்வு மனப்பான்மையைத் தாழ்த்துகிறோமோ ! அப்போது தான் நாம் வெற்றி வாகையைச் சூட முடியும். தன்னம்பிக்கை என்பது வெற்றி தோல்வி கருதாது தன் மீதும் தான் செய்து கொண்டிருக்கும் செயல்பாட்டின் மீதும் முழுமையாக நம்பிக்கை கொண்டு, தொடங்கிய காரியத்தை முழுமையாக நிறைவேற்றுவது ஆகும்.

தோல்வியைக் கண்டு அச்சம் கொள்ளாது தான் செய்த செயலைத் தொடர்ந்து செய்து தன்னம்பிக்கையின் மூலம் வெற்றி கண்டவர்களுள் ஒருவர் மாபெரும் தலைவரான ஆப்ரகாம் லிங்கன். இவர் அடையாத தோல்விகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்குத் தோல்வி அடைந்தவர். ஆப்ரகாம் லிங்கன் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சாதனையின் உச்சியை அடைந்தவர் ஆவார்.

 1831 – வியாபாரத்தில் தோல்வி 

 1832 – சட்டமன்றத் தேர்தலில் தோல்வி

 1833 – மறுபடியும் வியாபாரத்தில் தோல்வி

 1835 – காதலியின் மறைவு

 1836 – நரம்பு கோளாறு காரணமாக உடல்நலம் பாதிப்பு

 1838 – சட்ட மன்றத் தலைவர் தேர்தலில் தோல்வி

 1840 – எலக்டர் தேர்தலில் தோல்வி

 1843 – காங்கிரஸ் தேர்தலில் தோல்வி

 1855 – செனட் தேர்தலில் தோல்வி

 1856 – துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தோல்வி

 1858 – மறுபடியும் சென்ட் தேர்தலில் தோல்வி

இத்தனை தோல்விகளையும் கண்டு அஞ்சாமல் அடுத்ததாக நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 1860 – ஆம் ஆண்டு அவரின் தன்னம்பிக்கைக்கு பரிசாக அமெரிக்க அதிபர் பதவி கிடைத்தது.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பகிர்விற்கு நன்றி நண்பரே!

V.Nadarajan said...

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...