தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Wednesday, 30 May, 2012

பி.எஸ்.என்.எல். சார்பில் புதுவகை கையடக்க கணினி அறிமுகம் - ரூ.3495-க்கு விற்பனை

சென்னை மற்றும் தமிழ்நாடு தொலைபேசி வட்டாரங்கள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையிலான கையடக்க கணினிகளை (டி-பேட்) அறிமுகப்படுத்தி உள்ளன. 

ஐ.எஸ்.70 ஐ.ஆர். என்ற மாடலின் விலை ரூ.3495. இதில் ஆண்டிராய்டு 2.3 ஆபேரட்டிங் சிஸ்டம், 2 ஜி.பி. மெமரி, 3டி விளையாட்கள், கேமிரா வசதியும் உள்ளன.
703-சி மாடலில் ஆண்டிராய்டு 4.1 ஆபரேட்டிங் சிஸ்டம், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி, வை-பை இணைப்பு பெறும் வசதி உள்ளன. இதன் விலை ரூ.6499. இந்த 2 மாடல்களுமே செல்போனை விட சற்று பெரிதாக கையடக்கமாக உள்ளன. மிக எளிதாக கையில் கொண்டு செல்ல முடியும்.
லேப்-டாப்பில் என்னென்ன பணிகள் செய்யலாமோ அத்தனையும் இவற்றில் மேற்கொள்ள முடியும். பி.எஸ்.என். எல்.-ன் 2ஜி மற்றும் 3 ஜி சிம்கார்டுகளை இதில் பயன்படுத்தலாம். இந்த சிம்கார்டுகளை டேட்டா - கார்டுகள் மூலம் கருவியில் பொருத்த வேண்டும்.
இன்னும் 15 நாட்களில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மேலும் ஒரு நவீன மாடல் அறிமுகம் செய்யப்படும். இதில் பேசும் வசதியும் இடம் பெறும்.

4 comments:

Rathnavel Natarajan said...

பயனுள்ள தகவலுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

தகவலுக்கு நன்றி !

V.Nadarajan said...

தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி @ Rathnavel Natarajan

V.Nadarajan said...

தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி @ திண்டுக்கல் தனபாலன்

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...