தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Tuesday, 29 May 2012

சூரியஒளி மின்சாரத்திற்கு வழிகாட்டும் ஜெர்மனி!

சூரிய ஒளி மூலம் மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்து, சூரிய ஒளி மின் திட்டத்திற்கு வழிவகுக்கிறது ஜெர்மனி நாடு. அணு உலைகளுக்கு பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க ஜெர்மனி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக காற்றாலை, சூரிய ஒளி போன்றவற்றின் மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சூரிய ஒளி மூலம் அதிகளவு மின்சாரம் தயாரிக்க அந்நாட்டு அரசு அதிதீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே 14 ஜிகா வாட்ஸ் மின்உற்பத்தி திறன் கொண்டு இருந்த சூரிய ஒளி ஆலையில், இந்தாண்டு துவக்கத்தில் கூடுதலாக 7.5 ஜிகா வாட்ஸ் மின்உற்பத்தி செய்யும் சூரிய ஒளியை அமைத்தது ஜெர்மனி. இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதுநாள் வரை 20 ஜிகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மணிக்கு 22 ஜிகாவாட்ஸ் அதாவது 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்து இருக்கிறது. இது 20 அணு உலைகள் இருந்தால், அதில் எவ்வளவு மின்சாரம் கிடைக்கு‌மோ அந்தளவு மின்சாரம் இந்த சூரிய ஒளி மூலம் கிடைத்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் மூலம் நாட்டின் 50 சதவீத மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் கணக்கிடப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...