தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 11 September 2011

பொங்கல் மற்றும் உழவர் திருநாளின் சிறப்பு :+

தாய் திருநாடாம் தமிழ்த்திருநாட்டின் தனிச்
சிறப்பினை தரணியெங்கும் நிலைநாட்டிட
ஈகை பண்பின் அடையாளமாய் எழுச்சியின்
இலக்கணமாய் இயல்பாய் இயைந்திடும் குணம்
படைத்தோரின் குறைவிலா அன்பின் நிலையில்
மற்றுமொரு மாணிக்க திருநாளாம் தைதிருநாள்...

உழைப்பின் பெருமையினை உலகினுக்கே
பறைச்சாற்றும் உண்மை தமிழனின் உள்ள
உவகை பெருகிட உழைப்பு சிறந்திட என்றும்
ஒற்றுமையாய் உள்ளம் உருகி கடவுளுக்கே நன்றி
உரைக்கும் இனிப்பு திருநாளாம் தைதிருநாள்...

வாழ்நாள் முழுவதும் உழைத்து களைப்புற்ற
உழவனுக்கும் உயிர்களுக்கும் களைப்பு இருக்கும்
உடல் களைப்பு உடலுக்கு மட்டுமே
மனதிற்கு என்றுமே தேவை இனிப்பு
அதை தருவது தான் பொங்கலின் சிறப்பு
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...