தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 11 September 2011

எழுச்சி பெரு இளைஞனே!!!

கற்பனை உலகின் கதாநாயகனாய்
கனவு காணும் இளைஞனே!
விழித்தெழு!

கொஞ்சம் விழித்துப் பார்!
உன்னைச் சுற்றி,
சாதியென்னும் சாக்கடைச் சடுதி.....
கொஞ்சம் விழித்துப் பார்!
உன்னைச் சுற்றி,
மதங்களின் மாயை மதம்பிடித்தபடி....
கொஞ்சம் விழித்து பார்!
உன்னைச் சுற்றி,
வறுமையின் கோடுகள் வரிவரியாய்......
கொஞ்சம் விழித்துப் பார்!
உன்னைச் சுற்றி,
வெள்ளை உடுப்பில் கருப்பு ஊழல்கள்..
கொஞ்சம் விழித்துப் பார்!
உன்னைச் சுற்றி,
வேலை தேடுவதே வேலையாகப் பலர்.....
விழித்தெழு நண்பா!
மதில் மேல் உட்கார்ந்து கொண்டு
மையல் பேசுவதை விட்டுவிட்டு

மனிதம் பேசு!
மகாத்மாவாக
மாறாவிட்டாலும் பரவாயில்லை
மனிதனாக மாறு!


செயலாற்றத்தில்தான் இருக்கிறது!
நன்மைக்கு நிழலாய் இருங்கள்!
தீமைக்கு நெருப்பாய்ச் சுடுங்கள்!
தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதே!
கதிரவனைப் பார்!
மாலையில் மங்கலாய் மறைந்தாலும்
மறுநாள் காலையில் மலராமலா இருக்கிறது?
விழித்தெழு நண்பா!
மீன்குஞ்சு நீந்துவதற்கு துணையையா தேடுகிறது?
கடலலை சீறிஎழ காலத்தையா எதிர்பார்க்கிறது?
மின்மினிப் பூச்சி மின்னுவதற்கு மின்சாரமா கேட்கிறது?
நீ மட்டும் ஏன்?....
நிர்ப்பந்தத்தை நினைத்துக் கொண்டிருக்கிறாய்?
புறப்படு நண்பா!
குயவனாய் மாறி உருவாக்கு
பழுதற்ற உலகத்தை
புகழ்பெற உருவாக்கு
புதிய உலகத்தை!!!

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...