தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday, 11 September, 2011

துணுக்குச் செய்திகள்

1. மிதக்கும் அரண்மனை!உலகின் மிகவும் விலை உயர்ந்த, அரண்மனை போன்று தோற்றமளிக்கும் கப்பல் ஒன்று தயாராகி வருகிறது. இந்த கப்பலின் விலை, 5,150 கோடி ரூபாய்.
பிரிட்டன் நாட்டில் துறைமுகம் ஒன்றில் கட்டப்பட்டு வரும் இந்த கப்பல், மொனாக்கோ நாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்காக தயாராகி வருகிறது. அவர் பெயரை வெளியிட இந்த கப்பல் கட்டுமான நிறுவனம் மறுத்து விட்டது. 500 அடி நீளமுள்ள இந்த கப்பலுக்கு, "ஸ்டீரீட்ஸ் ஆப் மொனாக்கோ' என, பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்த கப்பலில் ஓட்டல்கள், நீச்சல் குளம், சூதாட்ட விடுதி, கார் ரேசுக்கான தனி பாதை, டென்னிஸ் மைதானம் ஆகியவை உள்ளன.
அரண்மனை போன்று வடிவமைக்கப் பட்டுள்ள இந்த கப்பலை இயக்குவதற்கு, 70 ஊழியர்கள் தேவை. கப்பலை இயக்கு வதற்கு மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.2. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும் செயற்கை மேகம்

           விளையாட்டு மைதானங்களை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை கல்லூரி பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார். இந்த செயற்கை மேகம், 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. கத்தார் பல்கலைக்கழகத்தில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியராக பணியாற்றி வருபவர் சாவூத் அப்துல் கனி. இவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர், திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயில் மற்றும் வெப்பத்தை தடுத்து, குளுமையாக வைத்திருப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகின்றனர்.
           இது குறித்து, சாவூத் அப்துல் கனி கூறியதாவது: திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில், வெயிலை தடுப்பதற்காக, செயற்கை மேகத்தை உருவாக்கி வருகிறோம். இது, 100 சதவீத கார்போனிக் பொருட்களாலானது. இந்த செயற்கை மேகத்தை, "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்க முடியும். இதனால், நாம் விரும்பும் இடத்தில், இந்த மேகத்தை நகர்த்தி வைத்து கொள்ளலாம். 2022ம் ஆண்டில், தோகா நாட்டில் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, இந்த செயற்கை மேகம் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், கடற்கரை, கார் நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தும் விதத்தில், செயற்கை மேகங்களை உருவாக்கி வருகிறோம். இதை, மொபைல் போன்கள் மூலம் இயக்கலாம். இதன் துவக்க விலை, 23 லட்ச ரூபாய். எனினும், இது விற்பனைக்கு வரும் போது, இதன் விலை, கூடவோ, குறையவோ செய்யலாம். 

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...