தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday 11 September 2011

தமிழ் ஹைகூக்கள்

1.கனவுகளோடு பறந்தோம்!கனவுகளும் பறந்தன“துபாய் வாழ்வு”
2.ஆங்கிலத்தில் அறிவிப்புஇந்திப் பாடலுக்கு நடனம்“தமிழ்ச் சங்க நிகழ்ச்சி”
3.தீப்பெட்டியைத் திறந்தேன்“பிஞ்சு விரல்கள்”
4.தொடர் மழைக்காலம்குப்பைகளுக்கும் குடை!“காளான்கள்”
5.எதிர் வீட்டுச் சன்னல்களில்எத்தனை சட்டைகள்!என் சட்டையில் எத்தனை ஜன்னல்கள்!
6.ராகங்கள் எரிகின்றனஅழுமா மழை?“மூங்கில் காட்டில் தீ”
7.கிணற்றுச் சரிவில்குருவியும் குஞ்சுகளும்“மனதில் இருக்குது வாழ்க்கை!”
8. மரணத்தைச் சுவாசிக்கக்கால இடைவெளி“ஃப்ரிட்ஜில் பூ”
9.புகை கக்கியபடி வருகிறது நந்தவனம்“லேடீஸ் பஸ்”
10.பிறக்கும் போதேசிக்கலுடன் பிறக்கிறது“ஜாங்கிரி”
11.நல்ல வெயில்தோகை விரித்தது மயில்“குடையுடன் அவள்”
12.வாரிசுகளை நம்பாமல்தனக்குத் தானே கொள்ளி“உதட்டிடுக்கில் புகை”
13.உருவம் தவிர்த்துஉணரத் தொடங்கு“காதலோ! கடவுளோ!”
14.வாங்கியதால் உள்ளே தள்ளிவிட்டார்கள்....கொடுத்ததால் வெளியே வந்துவிட்டேன்....“லஞ்சம்”
15.புரண்டு புரண்டு அழுகைஅப்படி என்னதான் குறை?“பேசுமா அலைகள்!”
நன்றி: நிலாச்சாரல்

No comments:

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...