தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Tuesday, 20 September, 2011

தெரியுமா உங்களுக்கு?

1. குறுந்தகடு(சி.டி) செயல்படும் விதம்:
சிடிக்கள் என அழைக்கப்படும் காம்பாக்ட் டிஸ்க்குகள் அதில் பதிந்துள்ள தகவல்களை நடு மையத்திலிருந்து படிக்கத் தொடங்கி விளிம்பில் முடிக்கின்றன. இது மியூசிக் ரெகார்டுகளுக்கு எதிரான வழியாகும். மியூசிக் ரெகார்டுகள் விளிம்பிலிருந்து தொடங்கி நடுப்பாகம் செல்கின்றன.

 2. பாராசிடமால் மாத்திரையின் மறுபக்கம்:
மழை, குளிர் காலங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சலினால் உடலின் வெப்ப நிலை சராசரிக்கும் மிக அதிகமாகும் போது, "இழுப்பு' போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.காய்ச்சல் வெப்ப நிலையை உடனடியாகக் குறைக்க, பாராசிட்டமால் உதவுகிறது. ஆனால் 18 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, அடிக்கடி பாராசிட்டமால் கொடுத்தால் ஆஸ்துமா, அலர்ஜி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது என, லண்டனில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 6 வயது குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராயும் போது, அவர்களுக்கு ஒன்றரை வயதுக்குள் அதிகளவில் பாராசிட்டமால் கொடுத்திருந்தது தெரிய வந்துள்ளது. குழந்தைகள் நல மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, பாராசிட்டமாலைப் பயன் படுத்த வேண்டும். அவர்கள் நிர்ணயித்த அளவு மட்டுமே தர வேண்டும். பெற்றோர்கள் தன்னிச்சையாக பாராசிட்டமாலை குழந்தை களுக்கு தரக்கூடாது.

 3. கைபேசி தொலைந்தால் கண்டுபிடிக்க:
ஒரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம். 

4.குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள்:
இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் குழந்தைகளில் 2.5 கோடி பேர் ஏதாவது ஒரு குறையுடன் பிறக்கின்றனர். தமிழகத்தில் ஆண்டுக்கு 11.5 லட்சம் குழந்தைகள் எடைக்குறைவு உட்பட பல்வேறு குறைபாடுகளுடன் பிறக்கிறது. இந்தியாவில் 5 சதவிகிதம் பேர் டிஸ்லெக்சியா, ஆட்டிசம் போன்ற அரிய வகையிலான குறைகளுடன் பிறக்கின்றனர்.

5. 'ஆண்டி பயாடிக்’ மாத்திரை ஆபத்து!:
'ஆண்டி பயாடிக்’ மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. தலைவலியிலும், காய்ச்சலிலும் பல வகைகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த வகை என்று தெரியாமல் ஒரே மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவது தவறு. இந்த பழக்கம் அதிகமானால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.

6. அழிவின் விளிம்பில் தேசிய விலங்கு புலி:
இந்தியாவில் 1988 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, தினமும் ஒரு புலி வீதம் எங்கோ ஒரு மூலையில் கொல்லப்பட்டது. இந்த வனவிலங்கு கழகம் ஒருமுறை கூட, கூடி சிந்திக்காததால் இதை தடுக்க முடியவில்லை. இவற்றின் தோல் சீனர்களின் வீடுகளை அலங்கரிக்கிறது. எலும்புகள் சீன மருந்துவத்தில் முக்கிய இடத்தை பெறுகின்றன. சீனர்கள் அதிகம் விலை கொடுப்பதால், இந்தியாவில் புலிகளை கொன்று ஏற்றுமதி செய்வது அதிகரித்தது. இப்படி புலிகளின் எண்ணிக்கை மிக குறைந்து போய் கொண்டிருப்பது, இந்திய அரசின் கவனத்திற்கு வந்தது. பின் போர் கால அடிப்படையில் புலிகளை காப்பதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

4 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி ஐயா.

V.Nadarajan said...

தங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி....

Roaming Raman said...

போரடிக்காது என்றால் தொடர்ந்து படிக்கவும்!! பழைய மியூசிக் ரெகார்டுகள் Constant Circular Velocityல் இயங்கியவை (சீரான வேகத்தில் சுழலும் தன்மை) குறுந்தகடு constant linear velocityல் இயங்கும்.(தொடங்கும் போழ்து 500 rpm சீராக மாறி இறுதியில் 200 rpm) மேலும், மியூசிக் ரெகார்டுகள் ஸ்டைலஸ் மூலம் நேரடி தொடர்பின் அதிர்வினால் இயங்கிவை.உராய்வுத் தேய்மானம் உண்டு!! குறுந்தகடுகள் வெறும் ஒளியின் அதிர்வு மாறுபாடுகளை படித்து இயங்குபவை..உராய்வுத் தேய்மானம் இல்லை !! (கிட்டத்தட்ட டார்ச் அடித்துப் படிப்பது போல!!) இதில் தகவல் எழுதப்படும் விதமும் சுவாரஸ்யமானது..இந்த எழுதப்படும் முறையால்தான் சில பலமான கீறல்கள் இருந்தாலும் பிரச்சினை இன்றி பாடும்- அல்லது படமாக காண முடியும். போதும்... எனக்கே போரடிக்கிறது..

-ரோமிங் ராமன்

V.Nadarajan said...

உங்கள் தகவலுக்கும் வருகைக்கும் நன்றி... @ Roaming Raman

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...