தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Sunday, 11 September, 2011

செய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கவிதை

செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்.
கையும் காலுந்தான் உதவி - கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி.
பயிரை வளர்த்தால் பலனாகும் - அது
உயிரைக் காக்கும் உணவாகும்.

வெயிலே நமக்குத் துணையாகும் - இந்த
வேர்வைகள் எல்லாம் விதையாகும்.
தினம் வேலையுண்டு குல மானமுண்டு
வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம்.
சாமிக்குத் தெரியும், பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை - அந்தச்
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை - இதைப்
பாடிப்பாடி விளையாடி ஆடிப்பல
கோடிக் கோடி முறை கும்பிடுவோம்.

காயும் ஒரு நாள் கனியாகும் - நம்
கனவும் ஒருநாள் நனவாகும்.
காயும் கனியும் விலையாகும் - நம்
கனவும் நினைவும் நிலையாகும் - உடல்
வாடினாலும் பசி மீறினாலும் - வழி
மாறிடாமலே வாழ்ந்திடுவோம்.

1 comment:

Anonymous said...

Love the clock. So cool. Good info

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...