தொகுப்புகள் - தற்போதைய இடுகைகள்

திருக்குறள் ஒலி(ஆடியோ) வடிவில்...

Tuesday 13 September, 2011

பல்சுவை செய்திகள்...

  • ஸ்ரீ என்னும் சொல் தமிழ்ச்சூழலில் புகும் முன்னரே திரு என்னும் பெயரைத் தாங்கிய ஊர்ப்பெயர்கள் தமிழ்நாட்டில் இருந்தன.
  • திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், கூந்தன்குளம் என்னும் ஊர் இந்நாளில் பன்னாட்டுப் பறவைகள் வந்து கூடும் பறவையடியாக (பறவைச் சரணாலயமாக) விளங்குகிறது. இது சங்ககாலத்தில் ஊணூர் என்னும் பெயருடன் அன்றில்-பறவைகளின் புகலிடமாகத் திகழ்ந்தது.
  • புகழ்பெற்ற சோழ மன்னர் முதலாம் இராஜராஜ சோழன் என்பாரது இயற்ப்பெயர் "அருண்மொழி வர்மன்" என்பதாகும்.
  • சப்பானிய சிலந்தி நண்டுடைய ஒரு காலின் நீளம் இரண்டு சராசரி மனிதர்களின் உயரத்துக்கு(3.8 மீட்டர் (12 அடி)) சமம்.
  • குண்டலினி யோகம் என்பது யோகாசனங்களில் உயிரோட்டத்தை சீர்படுத்துவதற்காக செய்யும் பயிற்சியாகும்.
  • கருடன், பருந்து வகையைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.
  • பழங்கள் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் கொண்டவை.
  • டைட்டன் ஆரம் உலகிலேயே மிகப்பெரிய தொகுப்பு மலர் தரும் தாவரமாகும்.
  • முதலையின் கடினமான ஓட்டைக் கூட ஜாகுவார் கடிக்கக் கூடியது.
  • இந்தியும் ஆங்கிலமும் இந்திய-ஐரோப்பிய மொழிகள் எனும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை.
  • மர்மக் கிரகம் என்பது வானியலாலர்களால் தேடப்படும் சூர்ய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகமாகும்.
  • அண்டத்தில் கரும்பொருட்கள் மற்றும் கரும் சக்திகளே 90 சதவிகிதத்தை ஆக்கிரமித்திருக்கின்றன.
  • மானிடரால் காட்சிக்குட்பட்ட பேரண்டத்தின் மொத்த எடை 3×1079 நீரியம் அணுக்களின் எடைக்கு சமமானதாகும்.
  • சில நாடுகளின் சுதந்திர தினம், தேசிய தினம், விடுதலை தினம் போன்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
  • லட்சியா என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டு மைப்பால் உருவாக்கப்பட்ட ஆளில்லாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடும் விமானமாகும்.
  • வாரத்திற்கு 7 நாட்கள், ஒரு நாளைக்கு 12 இரட்டை ம்ணிநேரங்கள், ஒவ்வோரு இரட்டை ம்ணி நேரத்திற்கும் 120 நிமிடங்கள் என்று உலகத்துக்கு அறிவித்தவர்கள் சாலடியர்களே.
  • கடைசல் இயந்திரம் என்பது மூலப்பொருளை உருளடிப்படை உருவத்திற்கு மாற்ற உதவுகிறது.
  • ஈழம் என்பது தமிழர் வழங்கிய தமிழ்சொல். 
  • திருச்சி போர்த் தளவாடத் தொழிற்சாலையால் தயாரிக்கப்பட்ட வித்வான்சாக் தொலைகுறித் துப்பாக்கி மூலம் 2,000 மீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை தாக்க முடியும்.
  • தமிழகத்தில் வேங்கைப்புலி என அழைக்கப்படுவது ஆசியச் சிறுத்தை ஆகும்.
  • நீத்தார் வழிபாடு என்பது இறந்து போன தன் முன்னோர்களை வழிபடும் ஒரு பண்பாட்டு முறையாகும்.
  • சொழாந்தியம் என்பவை முற்கால சோழர்களால் பயன்படுத்தப்பட்ட கப்பல்களாகும். இவற்றில் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து பசிபிக் தீவுகள் வரையில் சோழர்களால் பயங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கூறுகிறார்.
  • துர்தேவதை என்பது வானியலாலர்களால் தேடப்படும் சூரியனின் துணை விண்மீனாகும். தமிழர்கள் இதனை மைம்மீன் என்றும் தூமம் என்றும் புறநானூறு இலக்கியத்தில் பதிந்துள்ளனர்.
  • சோழர்கள் சீனத்துடன் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே தொடர்பு கொண்டிருந்தனர். 
  • பதினெண் புராணங்களில் மிகப்பெரியது கந்தபுராணம். மிகச்சிறியது மார்க்கண்டேய புராணம்.
  • இந்து நம்பிக்கையின் படி, அரைஞாண் அணிந்தோர் ஆடை அணியாவிடிலும் அவர்கள் நிர்வாணிகளாய்க் கருதப்படுவதில்லை.
  • பகவானின் தத்துவங்களை ஆதி முதல் அந்தம் வரை எடுத்து அலசியிருக்கும் பகவத் கீதை யின் 18 அத்தியாயங்களிலும் 'நாராயண' என்ற சொல் வரவேயில்லை என்பது ஓர் அதிசயம்.

2 comments:

Rathnavel Natarajan said...

பகவானின் தத்துவங்களை ஆதி முதல் அந்தம் வரை எடுத்து அலசியிருக்கும் பகவத் கீதை யின் 18 அத்தியாயங்களிலும் 'நாராயண' என்ற சொல் வரவேயில்லை என்பது ஓர் அதிசயம்.

அருமையான தொகுப்பு.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

V.Nadarajan said...

தங்கள் வாழ்த்துக்கள் மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. நன்றி....

Post a Comment

இந்த "தொகுப்புகள்" வலைப்பூவின் பதிவு குறித்து உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள் . மேலும் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!

பழமொழி இன்று

Related Posts Plugin for WordPress, Blogger...